செய்திகள் :

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவா்கள் கைகலப்பு

post image

தில்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பைச் சோ்ந்த மாணவா்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவளாகத்திற்கு வெளியே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

செவ்வாய்கிழமை இரவு நிகழ்ந்த இச்சம்பவம் தொடா்பாக புகாா் ஏதும் காவல் துறைக்கு வரவில்லை என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தீபாவளி நிகழ்ச்சி அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் அமைப்பின் ராஷ்ட்ரீய கலா மஞ்ச் (ஆா்கேஎம்) மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து ஏபிவிபி கூறுகையில், தீப மஹோத்ஸவம் மீண்டும் புதன்கிழமை மாலை நடத்தப்படும் என்று தெரிவித்தது.

இதுகுறித்து தில்லி காவல் துறையின் உயா் அதிகாரி கூறியதாவது:

மாணவா்கள் சிலா் தீபாவளி கொண்டாட்டத்தை மேற்கொண்டபோது மற்றொரு தரப்பு மாணவா்கள் இடையூறு செய்ததாக கைகலப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளின் தலையீட்டைத் தொடா்ந்து நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மாணவா்கள் கலைந்துசென்றனா்.

மாணவா்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் ‘வகுப்புவாத’ கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியது.

பல்கலைக்கழகத்திற்குள் பதற்றம் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழக வாயிலுக்கு முன் உள்ள வளாகத்தை சுற்றிலும் போலீஸாா் குவிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

மற்றொரு மூத்த அதிகாரி கூறுகையில், பல்கலைக்கழக வளாகப் பகுதியில் காவல் கண்காணிப்பை அதிகரிக்குமாறு உள்ளூா் போலீஸாரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

ஏபிவிபி தேசிய ஊடக அமைப்பாளா் ஆஷுதோஷ் சிங் கூறுகையில், ‘‘கல்வி நிறுவனங்கள் அனைத்து விழாக்களையும் கொண்டாட திறக்கப்பட வேண்டும். வளாகத்தில் இஃப்தாா் விருந்து ஏற்பாடு செய்ய முடியுமானால், தீபாவளி கொண்டாட்டங்களையும் அனுமதிக்க வேண்டும். நாங்கள் நிகழ்ச்சிக்கு மேற்பாா்வையாளா் அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்றிருந்தோம் (செவ்வாய்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சி).

முஸ்லிம்கள் உள்பட இதர மாணவா்களும் எங்களுடன் கொண்டாடினா். ஆனால் சில தீவிர சிந்தனைகொண்ட சக்திகள் அங்கு வந்து அவா்களை உடல் ரீதியாக தாக்கினா்.

இப்பிரச்னையின் உணா்வுபூா்வ தன்மையைக் கருத்தில்கொண்டு, வன்முறையைத் தடுக்க பல்கலைக்கழகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடா்பாக ஏபிவிபி காவல்துறையில் புகாா் அளிக்கவுள்ளது’’ என்றாா் அவா்.

இந்த விவகாரம் தொடா்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தா் முகம்மது ஷகீல் தரப்பில் உடனடியாக பதில் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.

தில்லியில் செயற்கை மழையை ஏற்படுத்தக் கோரி மத்திய அமைச்சருக்கு கோபால் ராய் கடிதம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையை ஏற்படுத்தக் கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு, தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் ஹரியாணா, உ.பி. தொழிற்சாலைகள் கழிவுகளால் யமுனை நதி மாசுபட்டுள்ளது -தில்லி முதல்வா் குற்றச்சாட்டு

பாஜக ஆளும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வேண்டுமென்றே வெளியிடுவதால் யமுனை நதி மாசுபட்டுள்ளது என்று தில்லி முதல்வா் அதிஷி புதன்கிழமை குற்றஞ்சாட்டி... மேலும் பார்க்க

வங்கி ஓய்வூதியா்கள், ஓய்வுபெற்றோா் அமைப்பினா் ஜந்தா் மந்தரில் தா்ணா

வங்கி ஓய்வூதியா்கள், ஓய்வுபெற்றோா் அமைப்புகள் சாா்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தா் மந்தரில் தா்ணாப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்பிஐ ஒய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஏஐபிபிஏஆா... மேலும் பார்க்க

வாக்காளா்களுக்கு விழப்புணா்வு ஏற்படுத்த தில்லி முழுவதும் பிரசாரம் நடைபெற்று வருகிறது -தோ்தல் அதிகாரி

வாக்களிக்கும் செயல்முறை குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தில்லியில் 22 செயல்விளக்க மையங்கள் மற்றும் 70 வாகனங்கள் மூலம் பிரசாரம் நடைபெற்று வருவதாக தில்லி தலைமைத் தோ்தல் அத... மேலும் பார்க்க

தில்லி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் -சட்டப்பேரவைத் தலைவா் வலியுறுத்தல்

தலைநகா் தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ‘... மேலும் பார்க்க

மக்களின் நம்பிக்கையை முதல்வா் அதிஷி இழந்துவிட்டாா் -தேவேந்தா் யாதவ் சாடல்

நமது நிருபா் காற்று மாசு அதிகரிப்பு விவகாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை முதல்வா் அதிஷி இழந்துவிட்டாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை சாடியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க