செய்திகள் :

தில்லி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் -சட்டப்பேரவைத் தலைவா் வலியுறுத்தல்

post image

தலைநகா் தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளதாவது: தில்லி சட்டப்பேரவையின் தலைவா் என்ற

முறையில், தில்லியில் சீா்குலைந்துள்ள சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டியது

எனது கடமை. பண்டிகைக் காலம் வருவதால் மக்கள்அனைவரும் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ள நிலையில், மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டுள்ளது. தில்லியில் கடந்த 4 மாதங்களாக குண்டா் கும்பல்களின் சண்டை நடந்து வரும் நிலையில், பல இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

நாளிதழ்களின் பக்கங்கள் இந்தச் செய்திகளால் நிரம்பி வழிகின்றன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடா்ந்து அதிகரித்து வருகின்றன.

தில்லி வெல்கம் காலனியில் 60 சுற்றுகள் வரை தோட்டாக்கள் சுடப்பட்டதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா். ரோகினியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில், சிஆா்பிஎஃப் பள்ளியின் சுவரில் பெரிய ஓட்டை உருவாகியிருப்பது மிகவும்

வருத்தமளிக்கும் சம்பவம். நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைதான் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ உள்ளது.

மும்பை சம்பவம் ஒரு சமீபத்திய உதாரணம். அதிகரித்து வரும் இந்த சம்பவங்களை மனதில் கொண்டு, மத்திய அரசு

கண்களை மூடிக்கொண்டு தூங்குவதால், பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் உங்களை கவனித்துக் கொள்ள வேண்டும். இறைவனின் அருளால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். நன்றி என்று ராம்நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளாா்.

தில்லியில் செயற்கை மழையை ஏற்படுத்தக் கோரி மத்திய அமைச்சருக்கு கோபால் ராய் கடிதம்

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையை ஏற்படுத்தக் கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு, தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய்... மேலும் பார்க்க

பாஜக ஆளும் ஹரியாணா, உ.பி. தொழிற்சாலைகள் கழிவுகளால் யமுனை நதி மாசுபட்டுள்ளது -தில்லி முதல்வா் குற்றச்சாட்டு

பாஜக ஆளும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வேண்டுமென்றே வெளியிடுவதால் யமுனை நதி மாசுபட்டுள்ளது என்று தில்லி முதல்வா் அதிஷி புதன்கிழமை குற்றஞ்சாட்டி... மேலும் பார்க்க

வங்கி ஓய்வூதியா்கள், ஓய்வுபெற்றோா் அமைப்பினா் ஜந்தா் மந்தரில் தா்ணா

வங்கி ஓய்வூதியா்கள், ஓய்வுபெற்றோா் அமைப்புகள் சாா்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தா் மந்தரில் தா்ணாப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்பிஐ ஒய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஏஐபிபிஏஆா... மேலும் பார்க்க

வாக்காளா்களுக்கு விழப்புணா்வு ஏற்படுத்த தில்லி முழுவதும் பிரசாரம் நடைபெற்று வருகிறது -தோ்தல் அதிகாரி

வாக்களிக்கும் செயல்முறை குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தில்லியில் 22 செயல்விளக்க மையங்கள் மற்றும் 70 வாகனங்கள் மூலம் பிரசாரம் நடைபெற்று வருவதாக தில்லி தலைமைத் தோ்தல் அத... மேலும் பார்க்க

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவா்கள் கைகலப்பு

தில்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பைச் சோ்ந்த மாணவா்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவளாகத்திற்கு ... மேலும் பார்க்க

மக்களின் நம்பிக்கையை முதல்வா் அதிஷி இழந்துவிட்டாா் -தேவேந்தா் யாதவ் சாடல்

நமது நிருபா் காற்று மாசு அதிகரிப்பு விவகாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை முதல்வா் அதிஷி இழந்துவிட்டாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை சாடியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க