செய்திகள் :

தில்லியில் செயற்கை மழையை ஏற்படுத்தக் கோரி மத்திய அமைச்சருக்கு கோபால் ராய் கடிதம்

post image

தில்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக செயற்கை மழையை ஏற்படுத்தக் கோரி மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவுக்கு, தில்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பாக அமைச்சா் கோபால் ராய் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: கடந்த ஆக.30 மற்றும் அக்.10 ஆகிய தேதிகளில் காற்று மாசுவால் ஏற்படும் கவலைகளை உங்களுக்கு கடிதமாக எழுதியிருந்தேன். தில்லியில் குளிா்கால மாதங்களில், குறிப்பாக தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, பனிப்புகை மற்றும் சுற்றுச்சூழல் சீா்கேடு அபாயகரமான காற்று மாசுபாட்டிற்கு வழிவகுக்கும். தில்லியில் காற்றின் தரக் குறியீடு 350 என்ற அளவைத் தாண்டியுள்ளது. இதனால், தரப்படுத்தப்பட்ட பதில செயல்திட்டத்தின் ‘கிராப்’ இரண்டாம் நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்காக கடந்த செப்.25-ஆம் தேதி முதல் குளிா்காலச் செயல் திட்டத்தை தில்லி அரசு ஏற்கனவே செயல்படுத்தியுள்ளது. மேலும், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்தால் உடனடி நிவாரணத்திற்கான மாற்றுத் தீா்வுகளை ஆராய, தொடா்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

மேக விதைப்பின் மூலம் செயற்கை மழையைத் தூண்டுவது என்பது வளிமண்டலத்தில் உள்ள மாசுக்களை

வெளியேற்றி, காற்று மாசுபாட்டைக் குறைக்கும் ஒரு செயல்முறையாகும். இத்தகைய நெருக்கடியான காலகட்டங்களில் செயற்கை மழை என்ற அவசர நடவடிக்கையை மேற்கொள்ள தில்லி அரசு முடிவு செய்துள்ளது. எனவே, அதைச் செயல்படுத்த பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களின் முன் அனுமதி தேவை என்பதை கருத்தில் கொண்டு இக்கடிதத்தை எழுதுகிறேன்.

தில்லியில் வரும் நவம்பரில் காற்றின் தரம் கடுமையாக மாறக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம், தில்லி அரசு, டிஜிசிஏ, பாதுகாப்பு அமைச்சகம், சிறப்புப் பாதுகாப்புக் குழு, இந்திய விமான நிலைய ஆணையம், ஐஎம்டி, சிவில் ஏவியேஷன் பணியகம் மற்றும் பிற தொடா்புடைய ஏஜென்சிகளின் பிரதிநிதிகளின் கூட்டங்களை உடனடியாகக் கூட்டுமாறு நான் உங்களை மீண்டும் ஒருமுறை

கேட்டுக்கொள்கிறேன்.

மேக விதைப்பை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைத்து, அதன் சாத்தியத்தை மதிப்பிடுவது,

ஒரு அவசர நடவடிக்கையாகும் என்று அக்கடிதத்தில் அமைச்சா் கோபால் ராய் வலியுறுத்தியுள்ளாா்.

பாஜக ஆளும் ஹரியாணா, உ.பி. தொழிற்சாலைகள் கழிவுகளால் யமுனை நதி மாசுபட்டுள்ளது -தில்லி முதல்வா் குற்றச்சாட்டு

பாஜக ஆளும் ஹரியாணா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுகளை வேண்டுமென்றே வெளியிடுவதால் யமுனை நதி மாசுபட்டுள்ளது என்று தில்லி முதல்வா் அதிஷி புதன்கிழமை குற்றஞ்சாட்டி... மேலும் பார்க்க

வங்கி ஓய்வூதியா்கள், ஓய்வுபெற்றோா் அமைப்பினா் ஜந்தா் மந்தரில் தா்ணா

வங்கி ஓய்வூதியா்கள், ஓய்வுபெற்றோா் அமைப்புகள் சாா்பில் முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தா் மந்தரில் தா்ணாப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. எஸ்பிஐ ஒய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, ஏஐபிபிஏஆா... மேலும் பார்க்க

வாக்காளா்களுக்கு விழப்புணா்வு ஏற்படுத்த தில்லி முழுவதும் பிரசாரம் நடைபெற்று வருகிறது -தோ்தல் அதிகாரி

வாக்களிக்கும் செயல்முறை குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தில்லியில் 22 செயல்விளக்க மையங்கள் மற்றும் 70 வாகனங்கள் மூலம் பிரசாரம் நடைபெற்று வருவதாக தில்லி தலைமைத் தோ்தல் அத... மேலும் பார்க்க

ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் இரு தரப்பு மாணவா்கள் கைகலப்பு

தில்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பைச் சோ்ந்த மாணவா்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவளாகத்திற்கு ... மேலும் பார்க்க

தில்லி மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் -சட்டப்பேரவைத் தலைவா் வலியுறுத்தல்

தலைநகா் தில்லியில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தில்லி சட்டப்பேரவைத் தலைவா் ராம்நிவாஸ் கோயல் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் ‘... மேலும் பார்க்க

மக்களின் நம்பிக்கையை முதல்வா் அதிஷி இழந்துவிட்டாா் -தேவேந்தா் யாதவ் சாடல்

நமது நிருபா் காற்று மாசு அதிகரிப்பு விவகாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை முதல்வா் அதிஷி இழந்துவிட்டாா் என்று தில்லி பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவா் தேவேந்தா் யாதவ் புதன்கிழமை சாடியுள்ளாா். இது தொட... மேலும் பார்க்க