ஜெயங்கொண்டத்தில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசனைக் கண்டித்து, நீதிமன்ற வளாகம் முன் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் திங்கள்கிழமை உண்ணாவிரதம் இருந்தனா்.
உண்ணாவிரதப் போராட்டத்தில், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேசன், வழக்குரைஞா்களுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
நீதிபதி கணேசனைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சுரேஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், மூத்த வழக்குரைஞா்கள் மனோகரன் குமாரசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.