செய்திகள் :

டபிள்யூடிசியை வென்றால் எங்கள் நாட்டுக்கு திருப்புமுனை: மார்க் பௌச்சர்

post image

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்றால் அது அந்நாட்டிற்கே திருப்புமுனையாக அமையுமென முன்னாள் வீரர் மார்க் பௌச்சர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் உலகில் ஐசிசி உலகக் கோப்பையே வெல்லாத அணியாக தென்னாப்பிரிக்க ஆடவர் அணி இருக்கிறது.

தெ.ஆ. அணி பலமுறை நாக் அவுட் போட்டிகளில் வெளியேறியுள்ளன. குறிப்பாக அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் தோல்வியைச் சந்திதுள்ளது. ஆனால், 1988இல் ஐசிசியின் சாம்பியன்ஸ் டிராபியை மட்டுமே வென்றுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (டபிள்யூடிசி) வெல்லும் முனைப்பில் இருக்கிறது. இதன் இறுதிப் போட்டியில் ஜூன்.11-இல் ஆஸி. உடன் மோதுகிறது.

இந்நிலையில், முன்னாள் பயிற்சியாளர் மார்க் பௌச்சர் கூறியதாவது:

மக்கள் தென்னாப்பிரிக்க அணியை விமர்சிக்கிறார்கள். அது நியாயமானதல்ல. நாங்கள் என்ன இருக்கிறதோ அதற்கேற்பவே விளையாடுகிறோம். எங்களுக்கு எதிராக நல்ல அணிகள் விளையாடியுள்ளன.

தற்போது, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளோம். ஆனால், இதனால் எங்களுக்கு மக்கள் ஆதரவு கிடைக்குமென நம்பவில்லை.

மக்கள் அதிக ஈடுபாட்டுடன் இறுதிப் போட்டியைக் காண வந்துள்ளார்கள்.

நாங்கள் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றால், டெஸ்ட் கிரிக்கெட்டில் எங்களது நாட்டில் திருப்புமுனையாக அமையும் என்றார்.

என் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சுக் காலத்தில் இருக்கிறேன்: ஹேசில்வுட்

ஆஸி. வீரர் ஜோஷ் ஹேசில்வுட், “நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சுக் காலத்தில் இருக்கிறேன்” எனக் கூறினார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஹேசில்வுட் (34) இதுவரை 72... மேலும் பார்க்க

3 மாதங்களாக பேட்டை தொடாத ஸ்டீவ் ஸ்மித்..! சுவாரசியமான விளக்கம்!

ஆஸி. முன்னாள் கேப்டனும் நட்சத்திர பேட்டருமான ஸ்டீவ் ஸ்மித் 3 மாதங்களாக பேட்டை தொடவில்லை எனக் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். கடைசியாக, ஸ்டீவ் ஸ்மித் சாம்பியன்ஸ் டிராபி லீக் போட்டியில் இ... மேலும் பார்க்க

இங்கிலாந்தில் பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி..!

இங்கிலாந்துக்குச் சென்ற இந்திய அணி தனது முதல் பயிற்சியைத் தொடங்கியது. இங்கிலாந்தில் 5 டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி லண்டன் சென்றடைந்தது. 2025-27 உலக டெஸ்ட் சாம்பி... மேலும் பார்க்க

சாய் சுதர்சன் ஒரு சூப்பர்ஸ்டார்..! முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

தமிழக வீரர் சாய் சுதர்சனை முன்னாள் ஆஸி. கேப்டன் புகழ்ந்து பேசியுள்ளார். அதில் சுதர்சனை சூப்பர்ஸ்டார் எனக் கூறியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் (23 வயது) குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக ஐபிஎல் தொ... மேலும் பார்க்க

2 ஏசிஎல் தசைகள் கிழிந்தும் 100 டெஸ்ட்டில் விளையாடிய புஜாரா..! ரோஹித் புகழாரம்!

இந்திய வீரர் புஜாராவுக்கு 2 ஏசிஎல் தசைகளும் கிழிந்தும் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியதாக ரோஹித் சர்மா கூறியுள்ளார். குஜராத்தில் பிறந்த புஜாரா (37) 103 டெஸ்ட்டுகளில் விளையாடி 7,195 ரன்கள் குவித்துள்ள... மேலும் பார்க்க

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்: மைக்கேல் கிளார்க்

ஆஸி. முன்னாள் கேப்டன் கிளார்க், “ டெஸ்ட் கிரிக்கெட்டை உயர்வாக நினைக்கும் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவார்” எனக் கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.பிஜிடி தொடரில... மேலும் பார்க்க