செய்திகள் :

Benz: `` LCU -வில் மற்றொரு ஸ்டார் நடிகர்; 3 கதாநாயகிகள்" - இயக்குநர் பகிர்ந்த அப்டேட்

post image

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் `பென்ஸ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜின் கதையை வைத்து பாக்யராஜ் கண்ணன் இந்த LCU படத்தை இயக்கி வருக்கிறார்.

இப்படத்தின் மூலம் ராகவா லாரன்ஸ், நிவின் பாலி ஆகியோரும் LCU-வுக்குள் என்ட்ரி கொடுத்திருக்கிறார்கள். 'பென்ஸ்' திரைப்படம் தொடர்பாக பல விஷயங்களை டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Nivin Pauly - LCU - Lokesh Kanagaraj
Nivin Pauly - LCU - Lokesh Kanagaraj

இயக்குநர் பாக்யராஜ் கண்ணன், "நாங்கள் ஒரு புதிய வைப் தரும் நடிகரைத் தேர்ந்தெடுக்க விரும்பினோம். அவர் வழக்கமான வில்லன் பாணியில் இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்தோம்.

இந்தப் படத்தில் ரசிகர்கள் ஒரு கொடூரமான கதாபாத்திரத்தில் நிவின் பாலியை எதிர்பார்க்கலாம். இந்த கதாபாத்திரம் அவரது முந்தைய கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டதாக இருக்கும்.

நிவின் அடுத்த மாதம் படப்பிடிப்பில் இணைகிறார். அவரே படத்தில் டப்பிங் செய்யவிருக்கிறார். வேற்று மொழி நடிகர்களைத் தேர்ந்தெடுக்கும்போது, அவர்கள் படத்திற்கு ஒரு தனித்துவமான நிறத்தைச் சேர்க்கிறார்கள்.

அவர் நெகடிவ் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். நிவின் மற்றும் லாரன்ஸ் தவிர, மற்றொரு நட்சத்திரமும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

பென்ஸ் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கிறார்கள். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடிக்கவிருக்கிறோம். மங்களூரு, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. லோகேஷும் நானும் நண்பர்கள்.

Director Bhagiyraj Kannan
Director Bhagiyraj Kannan

நான் மற்றொரு படத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அவர் மற்ற இயக்குநர்கள் LCU-வில் படங்கள் எடுக்கும் யோசனையைச் சொன்னார். நான் பணிபுரிந்த படத்தில் CGI அதிகமாக இருந்ததால், அதன் முன் தயாரிப்புக்கு அதிக நேரம் தேவைப்பட்டது. அதனால் இந்தப் படத்தை எடுத்தேன்.

2024 ஜனவரி முதல் நாங்கள் இந்தப் படம் பற்றி பேசி வருகிறோம். இந்தப் படம் ப்ரீக்வலாகவோ அல்லது சீக்வலாகவோ இருக்காது. ஆனால் LCU-வுடன் பல தொடர்புகள் இருக்கும்.

அடிப்படைக் கதையை லோகேஷ் உருவாக்கியிருக்கிறார். நான் அதை விரிவாக்கி, திரைக்கதையை எழுதியிருக்கிறேன்." என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Thirumavalavan: "திருமா அண்ணன் ஹீரோவாக வந்திருக்க வேண்டியவர்" - இயக்குநர் சுப்ரமணியம் சிவா

திருவள்ளுவரின் வாழ்க்கையை மையப்படுத்தி 'திருக்குறள்' படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன். இப்படத்திற்கு இவர் இசையமைத்தும் இருக்கிறார்.Thirukural Movieஇப்படத்தின் இசை வெளியீட்டு விழாவ... மேலும் பார்க்க

Sitaare Zameen Par: "அதற்காக சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்!" - ஆமீர் கான் சொல்வதென்ன?

ஆமீர் கானின் 'சித்தாரே ஜமீன் பர்' திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஜூன் 20-ம் தேதி வெளியாகவிருக்கிறது. தமிழில் 'கல்யாண சமையல் சாதம்' என்ற படத்தை இயக்கிய இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இப்படத... மேலும் பார்க்க

Ilaiyaraja: `மோடி, கலைஞர், ஸ்டாலின் என அனைவரும் அன்பு செலுத்தும் தலைவர் இளையராஜா' -அண்ணாமலை புகழாரம்

இளையராஜாவின் இசைக் கச்சேரி (Truly Live in Concert) நேற்றைய தினம் கோவையில் நடைபெற்றது. கடந்த ஜூன் 6-ம் தேதி இந்தக் கச்சேரிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பில் பங்கேற்ற இளையராஜா, "கோவையில் என்னுட... மேலும் பார்க்க

What to watch on Theatres: `தக் லைஃப்', `மெட்ராஸ் மேட்னி' - இந்த வார படங்கள் லிஸ்ட்!

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படங்களின் பட்டியல்.தக் லைஃப் (தமிழ்):மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் உள்ளிட்ட நட்சத்... மேலும் பார்க்க