செய்திகள் :

ஷைன் டாம் சாக்கோவை பலமுறை கண்டித்திருக்கிறேன்: ஆசிஃப் அலி

post image

நடிகர் ஷைன் டாம் சாக்கோ குறித்து ஆசிஃப் அலி பேசியுள்ளார்.

மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் ஷைன் டாம் சாக்கோ. கம்மட்டிபாடம், இஷ்க், குருப் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், குட் பேட் அக்லி திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் ஷைன். 

நல்ல நடிகராக இருந்தாலும் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவார். அண்மையில், போதைப்பொருள் வழக்கில் கைதாகி அதிர்ச்சியளித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை சாக்கோ தன் குடும்பத்தினருடன் காரில் பெங்களூர் சென்றுகொண்டிருந்தபோது தருமபுரி அருகே லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், ஷைனின் தந்தை சிபி சாக்கோ நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். ஓட்டுநரை தவிர மற்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த ஷைன் திருச்சூரில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இச்சம்பவம் குறித்து பேசிய நடிகர் ஆசிஃப் அலி, “ஷைன் டாம் சாக்கோவின் குடும்பத்திற்கு நிகழ்ந்த விபத்து சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு நல்ல நண்பனாக ஷைனின் நடவடிக்கைகளுக்காக பலமுறை கண்டிருத்திருக்கிறேன். கோபப்பட்டு அறிவுரைகளையும் கூறியிருக்கிறேன். ஆனால், இப்போது ஷைன் டாம் குடும்பத்துக்கு ஆதரவாக நிற்கவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நாடு முழுக்க புரமோஷன் செய்தும் தக் லைஃப் வசூல் இவ்வளவுதானா?

நாடு முழுக்க புரமோஷன் செய்தும் தக் லைஃப் வசூல் இவ்வளவுதானா?

நடிகர் கமல் ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல் ஹாசன், சிலம்பரசன் நடிப்பில் உருவான தக் லைஃப் திரைப்படம் வியாழக்கிழ... மேலும் பார்க்க

தனக்குத் தானே முரண்படும் ரொனால்டோ..! தங்கப் பந்து விருதுக்கான கருத்தால் சர்ச்சை!

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தங்கப் பந்து விருது கருத்துக்கு பிரெஞ்சு கால்பந்து வீரர் ரிபெரி கிண்டலாக எதிர்வினை ஆற்றியது பேசுபொருளாகியுள்ளது. கால்பந்து உலகில் தங்கப் பந்து விருது (பேலந்தோர்) மிகவும் முக்... மேலும் பார்க்க

மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடுவேன்: ரொனால்டோ

போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸியுடன் இணைந்து விளையாடும் காலம் வருமெனக் கூறியுள்ளார். கால்பந்து உலகில் தற்போது ரொனால்டோ, மெஸ்ஸிக்குதான் ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்க... மேலும் பார்க்க

பக்திப் பாடலை வெளியிட்ட இளையராஜா பேரன்!

இசையமைப்பாளர் இளையராஜாவின் பேரன் பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து வெளியிட்டுள்ளார். இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜாவின் மகனான யத்தீஸ்வர் ராஜாவும் இசைத்துறையில் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவி... மேலும் பார்க்க

அஜித்தை இயக்குவது யார்? பட்டியலில் பிரபல இயக்குநர்கள்!

நடிகர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் இயக்குநர் குறித்து ரசிகர்களிடம் ஆர்வம் எழுந்துள்ளது.விடாமுயற்சியின் தோல்வியைத் தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்களைக் க... மேலும் பார்க்க