செய்திகள் :

அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் பாகிஸ்தான் அணிக்கு புதிய கேப்டனா?

post image

அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக சல்மான் அலி அகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷான் மசூத் செயல்பட்டு வருகிறார். டி20 அணியின் கேப்டனான சல்மான் அலி அகா, டெஸ்ட் போட்டிகளிலும் கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. பாகிஸ்தானின் கிரிக்கெட் வளர்ச்சியை கவனிக்க குழு ஒன்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் உள்ள உறுப்பினர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவருக்கு தங்களது பரிந்துரைகளை தெரிவிப்பர். அதன் அடிப்படையில், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் பிற்பகுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரிலிருந்து, பாகிஸ்தானுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான சுழற்சி தொடங்குகிறது.

இந்த ஆண்டில் பாகிஸ்தான் அணி வெறும் 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2-வது டி20: இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மே.இ.தீவுகள்!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் எடுத்துள்ளது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்ட... மேலும் பார்க்க

2-வது டி20: இங்கிலாந்து பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி பிரி... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் சாதனை படைக்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்க வீரர்கள்!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க வீரர்கள் பலரும் புதிய சாதனை படைக்க காத்திருக்கின்றனர்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் வ... மேலும் பார்க்க

நாளுக்கு நாள் தலைமைப் பண்பில் முன்னேற்றமடையும் பாட் கம்மின்ஸ்; முன்னாள் ஆஸி. வீரர் பாராட்டு!

பாட் கம்மின்ஸின் தலைமைப் பண்பு நாளுக்கு நாள் முன்னேற்றமடைந்து வருவதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஆரோன் ஃபின்ச் தெரிவித்துள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் த... மேலும் பார்க்க

என் வாழ்க்கையின் சிறந்த பந்துவீச்சுக் காலத்தில் இருக்கிறேன்: ஹேசில்வுட்

ஆஸி. வீரர் ஜோஷ் ஹேசில்வுட், “நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த பந்துவீச்சுக் காலத்தில் இருக்கிறேன்” எனக் கூறினார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நட்சத்திர பந்துவீச்சாளர் ஹேசில்வுட் (34) இதுவரை 72... மேலும் பார்க்க

டபிள்யூடிசியை வென்றால் எங்கள் நாட்டுக்கு திருப்புமுனை: மார்க் பௌச்சர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வென்றால் அது அந்நாட்டிற்கே திருப்புமுனையாக அமையுமென முன்னாள் வீரர் மார்க் பௌச்சர் கூறியுள்ளார்.கிரிக்கெட் உலகில் ஐசிசி உலகக் கோப்பைய... மேலும் பார்க்க