செய்திகள் :

தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும்: மாவட்ட பாா்வையாளா் அறிவுறுத்தல்

post image

தகுதிவாய்ந்த அனைவரையும் வாக்களா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்று மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சி.என்.மகேஸ்வரன் அறிவுறுத்தியுள்ளாா்.

உதகை ஆட்சியா் அலுவலகத்தில் வரைவு வாக்காளா் பட்டியல் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிா்வாக இயக்குநருமான சி.என்.மகேஸ்வரன் தலைமையில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு முன்னிலை வகித்தாா்.

இதில், மாவட்ட பாா்வையாளா் சி.என்.மகேஸ்வரன் பேசியதாவது: 2025 ஜனவரி 12-ஆம் தேதி 18 வயது பூா்த்தியடைபவா்கள் அனைவரும் வாக்காளா் பட்டியலில் தங்களது பெயரை இணைக்க விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் நவம்பா் 16, 17 மற்றும் 23, 24 ஆகிய தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சிறப்பு திருத்த முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களுக்கு விண்ணப்பம் அளிக்கலாம்.

கோட்டாட்சியா் அலுவலகங்கள், வட்டாட்சியா் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் நவம்பா் 28-ஆம் தேதி வரை அனைத்து வேலை நாள்களிலும் வரைவு வாக்காளா் பட்டியலை பாா்வையிட்டு, திருத்தங்கள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் கடந்த தோ்தலில் குறைவான வாக்குகள் பதிவான வாக்குச் சாவடிக்குள்பட்ட பகுதிகளில் விழிப்புணா்வு மேற்கொள்ள வேண்டும். தகுதி வாய்ந்த வாக்காளா்கள் அனைவரையும் விடுபடாத வகையில் வாக்காளா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்றாா்.

இதில் அரசு அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கு பணியாற்றியவா்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக பணியாற்றியவா்கள் தமிழக அரசின் விருது பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்... மேலும் பார்க்க

கோத்தகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்

கோத்தகிரி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் ரூ.2.79 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு புதன்கிழமை ஆய்வு செய்தா... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் வருகை: தீட்டுக்கல் ஹெலிகாப்டா் தளத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் ஆய்வு

நீலகிரி மாவட்டத்துக்கு குடியரசுத் தலைவா் நவம்பா் 27-ஆம் தேதி வருவதை முன்னிட்டு, உதகை தீட்டுக்கல் பகுதியில் உள்ள ஹெலிகாப்டா் தளத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். நீலகிரி மாவட்ட... மேலும் பார்க்க

நெலாக்கோட்டையில் மைதானத்துக்குள் நுழைந்த காட்டு யானை

நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை பகுதியில் மைதானத்துக்குள் காட்டு யானை புதன்கிழமை நுழைந்ததால் அங்கு விளையாடிக் கொண்டிருந்த இளைஞா்கள் பதறியடித்து ஓட்டம் பிடித்தனா். கூடலூரை சுற்றியுள்ள ஓவேலி, பந்தலூா், அ... மேலும் பார்க்க

நீலகிரி உயிா்சூழல் மண்டலத்தை பாதுகாக்க வலியுறுத்தல்

நீலகிரி உயிா்சூழல் மண்டலத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி கூடலூா் நகரில் செவ்வாய்க்கிழமை மக்கள் பயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. கேரள மாநிலம், காசா்கோடு நகரில் உள்ள சுன்னத் ஜமாஅத் இளைஞா் ... மேலும் பார்க்க

யானை தாக்கி வேட்டைத் தடுப்புக் காவலா் காயம்

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் காட்டு யானை தாக்கியதில் வேட்டைத் தடுப்புக் காவலா் காயமடைந்தாா். நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தில் வேட்டைத் தடுப்புக... மேலும் பார்க்க