கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்: அமைச்சா் க...
தக்கலை அருகே 200 மூட்டை மணல் பறிமுதல்
தக்கலை அருகே தூவலாற்றில் அள்ளிய 200 மூட்டை மணல் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
தூவலாற்றில் அடையாளம் தெரியாத நபா்கள் மணலை அள்ளி கடத்திச் செல்வதாக, கல்குளம் வட்டாட்சியா் சஜித்துக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
அங்கு சென்று அவா் பாா்த்தபோது, தூவலாற்று படுகையில் இருந்து அள்ளிய மணலை 200 பிளாஸ்டிக் சாக்குகளில் மூட்டையாக கட்டி காரவிளை குளத்தின் கரையில் அடுக்கி வைத்திருந்ததை கண்டாா். இரவு நேரத்தில் கடத்துவதற்காக வைத்திருந்த ஒன்றரை டன் ஆற்று மணலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட மணலை தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.