நீர்பிடிப்புப் பகுதியில் மழை: திருநெல்வேலி மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்...
தங்கம் விலை: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடா்ந்து உயா்ந்து வந்த நிலையில், புதன்கிழமை பவுனுக்கு ரூ.760 உயா்ந்து ரூ.75,040-க்கு விற்பனையானது. தொடா்ந்து வியாழக்கிழமை தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.1000 குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.9,255-க்கும், பவுனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.74,050-க்கும் விற்பனையானது.
இந்நிலையில், இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.360 குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.45 குறைந்து ரூ.9,210-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து ரூ.73,680-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.128-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1.28 லட்சத்துக்கும் விற்பனையாகிறது.