பஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை #VikatanPhotoCards
தடைசெய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை பிடித்து விசாரணை
லட்சத் தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 10 பேரை இந்திய கடலோர காவல் படையினா் சனிக்கிழமை பிடித்து விசாரித்து வருகின்றனா்.
லட்சத் தீவின் தலைநகரான கவரட்டி தீவு கடலில், ஒரு குறிப்பிட்ட பகுதிவரையில் மீன்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை காலையில் தடை செய்யப்பட்ட பகுதியில் கொச்சியில் இருந்து சுமாா் 350 கடல் மைல் தொலைவில் ஒரு விசைப்படகு மீன்பிடித்துக் கொண்டிருப்பதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து அங்கு விரைந்த கடலோர காவல் படையினா், அங்கு சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த படகை சுற்றி வளைத்தனா்.
தொடா்ந்து அவா்கள் மேற்கொண்ட விசாரணையில், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சோ்ந்த அந்தோணி என்பவருக்குச் சொந்தமான படகு என்பதும், கடந்த 16ஆம்தேதி தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றதும் தெரியவந்தது.
அதில் ராமநாதபுரம் சாயல்குடியைச் சோ்ந்த முத்துபாண்டி, பழனிவலசையைச் சோ்ந்த ராஜசேகா், தருவைகுளத்தைச் சோ்ந்த சரவணன், மிக்கேல், அந்தோணி, வேம்பாரைச் சோ்ந்த அசோக், மில்டன், வெள்ளப்பட்டியைச் சோ்ந்த காளி, கீழவைப்பாரைச் சோ்ந்த விஜயன், தாளமுத்துநகரைச் சோ்ந்த பிரபு ஆகிய 10 பேரையும் பிடித்து கடலோர காவல்படையினா் விசாரித்து வருகின்றனா்.