செய்திகள் :

தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு: ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர்

post image

சென்னை: குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டிருக்கும் ஞானசேகரனுக்கான தண்டனை விவரம் வெளியான பிறகே அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் என ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் ஜி.பி. கோதண்டராமன் தெரிவித்துள்ளார்.

ஞானசேகரன் தரப்பு வழக்குரைஞர் கோதண்டராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, இந்த வழக்கில் 28 சாட்சிகளை விசாரணை செய்து சாட்சிகள் அனைத்தையும் குறுக்கு விசாரணை நடைபெற்றது. அதன் பிறகு எதிர்வாதம் எல்லாம் முடிந்து இன்று தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இன்று பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பில் எதிரி ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 11 குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டதாகக் கூறி அவரை குற்றவாளி என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

தண்டனை விபரங்களை திங்கட்கிழமை ஜூன் 2 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிமன்றம் சொல்லியுள்ளது. தண்டனை விவரம் தெரிந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்ய முடியும் என்பது குறித்து யோசிப்போம். மேல்முறையீடு போவது குறித்து முடிவெடுக்கப்படும்.

ஞானசேகருக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். குற்றச்சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கைப் பொறுத்தளவில் ஞானசேகர் மட்டும் தான் குற்றவாளி என காட்டப்பட்டுள்ளது. வேறு யாரேனும் குற்றவாளி இருக்கிறாரா என்பதை போலீஸ் தரப்போ அல்லது நீதிமன்றமோ சுட்டிக்காட்டவில்லை. நீதிமன்றத்தால் 11 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரம் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக்கூறு என்ன இருக்கும் என்பதை பார்த்து மேல்முறையீடு செய்யலாமா வேண்டாமா என யோசிப்போம்!

அரசு எங்களுக்கு இதைச் சொல்லி உள்ளது. நீதிமன்றம் சொல்லி உள்ளதால் நாங்கள் இதை தலையாய கடமையாக எடுத்துக் கொண்டு நேர்மையாக நடத்தி உள்ளோம் என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மகப்பேறு விடுப்பு! அரசு பெண் ஊழியர்களுக்கு பதவி உயர்வு நிச்சயம்! அரசாணை சொல்வது என்ன?

தமிழக அரசு பெண் ஊழியர்களின் ஓராண்டு மகப்பேறு விடுப்புக் காலம், தகுதிகாண் பருவத்தில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் மகப்பேறு விடுப்புக் ... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: ஒரே கருவியை பயன்படுத்திய பல் மருத்துவமனை! 8 பேர் பலி

திருப்பத்தூரில் தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் 8 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியால் பல் சிகிச்சை மருத்துவமனையில் ... மேலும் பார்க்க

7வது மாநில நிதி ஆணையத்தை அமைத்து தமிழக அரசு உத்தரவு!

ஏழாவது மாநில நிதி ஆணையத்தினை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலாவுதீன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் க... மேலும் பார்க்க

3 நாள்கள் தொடர் ஆலோசனை! அன்புமணியின் அடுத்த நகர்வு என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி குறித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வியாழக்கிழமை முன்வைத்த நிலையில், அன்புமணி கட்சி நிர்வாகிகள் உடன் 3 நாள்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தவுள்ளார்.ப... மேலும் பார்க்க

கரையைக் கடந்தது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுத... மேலும் பார்க்க

கமல்ஹாசன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை: அப்பாவு

தமிழில் இருந்து வந்ததுதான் கன்னடம் என நடிகர் கமல்ஹாசன் சொன்ன கருத்தில் எந்தத் தவறும் இல்லை என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,"அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தி... மேலும் பார்க்க