பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
தனியாா் நிதி நிறுவனத்தில் திருட்டு: ஒருவா் கைது
கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ. ரூ.1,82,000 திருடியதாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி அண்ணா நகா் பகுதியில் தனியாா் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் அண்மையில் கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ரகுபதி என்பவா் ஊழியராக பணியில் சோ்ந்தாராம். இவா், கடந்த நவ.19-ஆம் தேதி இரவு, நிறுவனத்தின் பூட்டை உடைத்து ரூ.1,82,000-த்தை திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து கா்நாடக மாநிலம், மைசூா் உதயகிரி பகுதியைச் சோ்ந்த நடராஜனை கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த ரூ.1,60,000 கைப்பற்றி, கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.