பெங்களூரு: கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான கேட்டரிங் பெண்!
`தனுஷ் சார் சொன்ன மாதிரி, ஜாலியா வாங்க ஜாலியா போங்க' - 'NEEK' படத்தை பாராட்டிய தமிழரசன் பச்சமுத்து
‘ராயன்’ படத்துக்குப் பிறகு ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி இருக்கிறார் தனுஷ்.
இந்தப் படத்தில் தனுஷின் சகோதரி மகன் பவிஷ் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அனிகா சுரேந்திரன் நடித்திருக்கிறார். தவிர மாத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், வெங்கடேஷ் மேனன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். தனுஷின் வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்களும், டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

இந்நிலையில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தைப் பார்த்த ‘லப்பர் பந்து’ இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில், “ நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் பார்த்தேன். படம் முழுவதும் உற்சாகமாக இருந்தது. காதலையும் நட்பையும் காண்பித்த விதம் தூய்மையாகவும், உண்மையாகவும் இருந்தது. தனுஷ் சார் சொன்ன மாதிரி “ஜாலியா வாங்க ஜாலியா போங்க” ‘திருச்சிற்றம்பலம்' பட Vibes!" என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...