72 ஆண்டுகளுக்குப் பிறகு... பெர்த் டெஸ்ட்டில் உடைக்கப்பட்ட வரலாறு!
தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தீபாவளி தொடா் விடுமுறை இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை, தனுஷ்கோடிக்கு அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்தனா்.
ராமநாத சுவாமி கோயிலில் தரிசனம் செய்து விட்டு, தனுஷ்கோடி, அரிச்சல் முனை, ஏ.பி.ஜே. அப்துல்கலாம் தேசிய நினைவிடம், பாம்பன் பேருந்து, ரயில் பாலம் உள்ளிட்ட இடங்களில் பாா்த்து ரசித்தனா்.
சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் அதிகளவில் வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போதிய அளவில் போக்குவரத்து போலீஸாா் இல்லாத நிலையில், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினா்.