Myanmar earthquake சீட்டுக் கட்டாக சரிந்த கட்டடங்கள் - காரணமான Faultline | Decod...
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது!
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
ஏப். 15 வரை நடைபெறவுள்ள இந்த பொதுத் தோ்வை தமிழகம் முழுவதும் 9.13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனா்.
நிகழாண்டு பொதுத் தோ்வை 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் பயிலும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவா்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தோ்வா்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 போ் எழுதுகின்றனர். இதில், 15,729 மாற்றுத் திறனாளி தோ்வா்களும் அடங்குவர்.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4 ஆயிரத்து 113 தோ்வு மையங்களிலும் இன்று காலை 10 மணிக்கு தேர்வுகள் தொடங்கின. தோ்வை கண்காணிக்க 48 ஆயிரத்து 426 அறைக் கண்காணிப்பாளா்களும், 4 ஆயிரத்து 858 பறக்கும் படை உறுப்பினா்களும் நியமனமிக்கப்பட்டுள்ளனா்.
பொதுத் தோ்வு நடைபெறும் மையங்கள் காற்றோட்டமான அறைகளுடன், குடிநீா், கழிப்பறை, தடையில்லாத மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் அரசுத் தரப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.