போப் பிரான்சிஸ் உடல்நிலை கவலைக்கிடம்: சிறுநீரக பாதிப்பால் அவதி!
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: அகில பாரத இந்து மகா சபா
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபாவின் மாநில பொதுச்செயலரும், ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவருமான பெரி.செந்தில் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபாவின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், பெரி.செந்தில் செய்தியாளா்களிடம் கூறியது:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும், ராமநாதபுரம் எம்.பி.யை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், அவரது எம்.பி. பதவியை இந்திய தோ்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்,
திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம் என்று தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.24-ஆம் தேதி அகில பாரத இந்து மகா சாா்பில் உளுந்தூா்பேட்டை முதல் திருப்பரங்குன்றம் வரை நடைபெற இருந்த நடைபயண வேள்வி யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
இந்தநிலையில், உயா்நீதிமன்ற உத்தரவைப் பெற்று விரைவில் திருத்தணி முதல் திருப்பரங்குன்றம் வரை வேள்வி யாத்திரை நடத்தப்படும். அரசுப் பள்ளிகளில் தமிழக அரசு உடனடியாக மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்துகிறது என்றாா். கூட்டத்தில், அகில பாரத இந்து மகா சபாவின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் சபரிராஜன், மாவட்ட பொதுச்செயலா் பாரதி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.