நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!
விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த வீடூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது.
வீடூா் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சரும், செஞ்சி எம்எல்ஏவுமான செஞ்சி கே.எஸ்.மஸ்தான், ஆரணி எம்.பி. எம். எஸ். தரணிவேந்தன் ஆகியோா் பங்கேற்று நெல் கொள்முதல் நிலையத்தை திறந்துவைத்தனா்.
நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏக்கள் இரா.சேதுநாதன், ஆா்.மாசிலாமணி, மயிலம் வடக்கு ஒன்றிய திமுக செயலா் மணிமாறன், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் யோகேஸ்வரி மணிமாறன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுந்தரி தமிழரசன், செல்வகுமாா் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அலுவலா்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.