`நான் எந்தவித தவறும் செய்யவில்லை; திமுக-வை மிரட்டி பார்க்க.!’ - அமைச்சர் கே.என்....
தமிழ்நாட்டின் மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல்! - 'கிராண்ட் மாஸ்டர்' பட்டத்தை வென்ற இளம்பரிதி!
நேற்று சென்னையை சேர்ந்த இளம்பரிதி ஏ.ஆர் போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினாவில் நடந்த பிஜெல்ஜினா ஓபனில் 'கிராண்ட் மாஸ்டர்' பட்டம் பெற்றுள்ளார்.
இந்தியாவில் இருந்து கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுபவர்களில் இவர் 90-வது நபர் ஆவார்.
2009-ம் ஆண்டு பிறந்த இவர், இதற்கு முன்பு, 2023-ம் ஆண்டு வியாட்நாமில் நடந்த ஹா நொய் போட்டியிலும், 2024-ம் ஆண்டு சிங்கப்பூரில் நடந்த சிங்கப்பூர் சர்வதேச ஓபனிலும் ஜி.எம் நார்ம் பெற்றிருந்தார்.
நேற்று மீண்டும் ஜி.எம் நார்ம் பெற்றதோடு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

பொதுவாக, மூன்று ஜி.எம் நார்ம் பெறுபவர்களுக்கே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது வெற்றியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
ஸ்டாலின் தமிழ்நாட்டின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதி என்றும், தமிழ்நாட்டின் மகுடத்திற்கு மேலும் ஒரு வைரத்தைச் சேர்த்துள்ளார் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்த்துகள் இளம்பரிதி!









.jpg)











