Myanmar earthquake சீட்டுக் கட்டாக சரிந்த கட்டடங்கள் - காரணமான Faultline | Decod...
தவெக பொதுக்குழு: நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் என்னென்ன?
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக் குழு அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் இன்று காலை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான தீர்மானம் உள்பட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக விஜய் அறிவித்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் அமைப்பு ரீதியாக கட்சியை பலப்படுத்தி வருகிறார்.
கடந்த மாதம் இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன்பிறகு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், இன்று பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டம் தொடங்கியவுடன் விஜய் உள்பட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். மேடையில் விஜய்யுடன் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் அமர்ந்துள்ளனர்.
மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், பொதுக் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளராக அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஒரு பெண் பிரதிநிதி என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த கூட்டத்தில், இருமொழிக் கொள்கைக்கு ஆதரவு, வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு, நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை, பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் நிலவும் சட்ட ஒழுங்கு பிரச்னைக்கு கண்டனம், டாஸ்மாக் ஊழலை முறையாக விசாரிக்க வேண்டும், அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு கண்டனம், இலங்கை தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதேபோல், தவெக தலைவருக்கு முழு அதிகாரம் வழங்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : வருங்கால முதல்வர் ஆனந்த்! தவெக போஸ்டரால் பரபரப்பு!
இன்று பிற்பகல் வரை நடைபெறவுள்ள கூட்டத்தின் இறுதியில் கட்சியின் தலைவர் விஜய் நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.