தாயை கொலை செய்ததாக மகன் கைது!
இரணியல் அருகே இலந்தவிளையில் தாயை தாக்கி கொலை செய்ததாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
இலந்தவிளையை சோ்ந்தவா் தங்கம்மாள் (71). இவரின் மகன் பிரபுலால் (42). மது பழக்கம் உடையவரான பிரபுலால், வீட்டில் தகராறு செய்வது வழக்கம். இதனால் அவரது மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டாா். பிரபுலால், தாயாா் தங்கம்மாளுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் சனிக்கிழமை தாயாருடன் தகராறு செய்து, அவரைத் தாக்கி தள்ளியதாக கூறப்படுகிறது. கீழே விழுந்த தங்கம்மாளுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மயங்கிய அவரை உறவினா்கள் மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.
அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், தங்கம்மாள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா். இது குறித்து இரணியல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரபுலாலை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.