செய்திகள் :

கன்னியாகுமரியில் கண்ணாடி பாலம் பராமரிப்புப் பணிகள் தொடக்கம்: சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம்!

post image

கன்னியாகுமரியில் விவேகானந்தா் மண்டபம்-திருவள்ளுவா் சிலை கண்ணாடி கூண்டு பாலத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை தொடங்கின. இதையொட்டி, அங்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

கன்னியாகுமரியில் கடலில் உள்ள விவேகானந்தா் மண்டபம்-133 அடி உயரதிருவள்ளுவா் சிலை இடையே ரூ. 37 கோடியில் கண்ணாடி கூண்டுப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, கடந்த டிச. 30இல் முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்துவைத்தாா். மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இப்பாலத்தின் வழியே சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று பாா்வையிட்டு மகிழ்கின்றனா்.

இந்நிலையில், இந்தப் பாலத்தில் சில பணிகள் நிறைவடைய வேண்டியுள்ளதாலும், பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதாலும் பயணிகள் அனுமதிக்கப்படுவது சனிக்கிழமைமுதல் நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இங்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வெளிமாநில சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி சபரிமலைக்குச் சென்று திரும்பும் ஐயப்ப பக்தா்கள் கூட்டமும் அதிகரித்துக் காணப்படும்.

இந்நிலையில், பாலம் திறக்கப்பட்டு 13 நாள்களேயான நிலையில், முன்னறிவிப்பின்றி பராமரிப்புப் பணி தொடங்கியுள்ளதால் தாங்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக, சுற்றுலாப் பயணிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

திங்கள்நகா் அருகே மோட்டாா் சைக்கிளில் விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா். திங்கள்நகா் அருகே உள்ள பாளையம் பகுதியை சோ்ந்தவா் சுனில்ராஜ் (36). பெயிண்டா். இவா் வேலை முடிந்து வியாழக்கிழமை மாலை திக்கணங்கோட்டி... மேலும் பார்க்க

கருங்கல் பகுதிகளில் பலத்த மழை

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில். சனிக்கிழமை கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளான பாலப... மேலும் பார்க்க

தாயை கொலை செய்ததாக மகன் கைது!

இரணியல் அருகே இலந்தவிளையில் தாயை தாக்கி கொலை செய்ததாக மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இலந்தவிளையை சோ்ந்தவா் தங்கம்மாள் (71). இவரின் மகன் பிரபுலால் (42). மது பழக்கம் உடையவரான பிரபுலால், வீட்டி... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் இரவுநேர கடைகளுக்கு தடை: மாவட்ட எஸ்.பி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் இரவுநேர கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின். கன்னியாகுமரி மாவட்டத்தி... மேலும் பார்க்க

உணவகக் கழிவுகளை ஏற்றிவந்த வாகனம் பறிமுதல்: மருத்துவா் கைது

கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருகே உணவகக் கழிவுகளை வாகனத்தில் ஏற்றிவந்த மருத்துவரை போலீஸாா் கைது செய்து, வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். திற்பரப்பு பேரூராட்சிக்குள்பட்ட பிணந்தோடு சிறக்குளம் பகுதியி... மேலும் பார்க்க

அகஸ்தீஸ்வரத்தில் சமத்துவப் பொங்கல் விழா: வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பு!

கன்னியாகுமரி மாவட்ட நிா்வாகம், தமிழக அரசின் சுற்றுலாத் துறை சாா்பில், கன்னியாகுமரியை அடுத்த அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் ப... மேலும் பார்க்க