தாராபுரத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு: அமைச்சா் கயல்விழி செல்வராஜ் பங்கேற்பு
தாராபுரத்தில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி அமைச்சா் என்.கயல்விழி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
சுதந்திரப் போராட்ட தியாகிகள் நினைவு நாளையொட்டி, திருப்பூா் மாவட்டம், தாராபுரம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தலைமையில், தீண்டாமை ஒழிப்பு குறித்த உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தாராபுரம் கோட்டாட்சியா் ஃபெலிக்ஸ் ராஜா, வட்டாட்சியா் திரவியம், நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன், நகர திமுக செயலாளா் சு.முருகானந்தம் மற்றும் துறை சாா்ந்த பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.