செய்திகள் :

திட்டமிட்டபடி கூலி படப்பிடிப்பை முடித்த லோகேஷ் கனகராஜ்!

post image

கூலி படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நிறைவடைந்துள்ளது.

பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான கூலியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

செளபின் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இதையும் படிக்க: டிராகன் ஓடிடி தேதி!

இந்த எதிர்பார்ப்புக்கிடையே படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புடன் படத்தின் மேக்கிங் விடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

கூலி திரைப்படம் ஆகஸ்ட் முதல் வாரம் அல்லது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன் முந்தைய படங்களான மாஸ்டர், விக்ரம், லியோ என பெரிய பட்ஜெட் படங்களின் படப்பிடிப்பைத் திட்டமிட்டபடி முடித்திருந்தார்.

அதேபோல், கடந்தாண்டு ஜூலை மாதம் துவங்கிய கூலி படத்தின் படப்பிடிப்பையும் தற்போது முடித்துக்கொடுத்துள்ளார். தொடர்ந்து, கைதி - 2 படத்திற்கான வேலைகளையும் லோகேஷ் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஓடிடி தேதி!

நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் இயக்கத்தில் இன்றைய இளைஞர்களின் காதலைப் பேசும் படமாக, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படம் கடந்த பிப். 2... மேலும் பார்க்க

எம்புரான்: முதல்முறையாக ஐமேக்ஸில் வெளியாகும் மலையாளத் திரைப்படம்!

நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாகிறது. இந்தப் படம்தான் ஐமேக்ஸில் வெளியாகும் முதல் மலையாளத் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் நடிகர் ... மேலும் பார்க்க

வாமோஸ் ஆர்ஜென்டீனா..! தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மனம் திறந்த மெஸ்ஸி!

உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடாதது குறித்து மெஸ்ஸி வருத்தமளிப்பதாகக் கூறியுள்ளார். கடந்த 2022இல் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீனா அணி வென்றது.37 வயதாகும் லியோனல் ... மேலும் பார்க்க

ரெட்ரோ: தாய்லாந்தில் தற்காப்பு கலைகளைக் கற்ற சூர்யா..!

ரெட்ரோ படத்துக்காக நடிகர் சூர்யா தாய்லாந்துக்குச் சென்று தற்காப்பு கலைகளைப் பயின்றுள்ளார்.நடிகர் சூர்யா - கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான திரைப்படம் ரெட்ரோ. ஆக்சன் கலந்த காதல் கதையாக இப்படம் ... மேலும் பார்க்க

புதிய தொடரில் ரேஷ்மாவுடன் இணையும் சுந்தரி சீரியல் நடிகர்!

புதிய தொடரொன்றில் நடிகை ரேஷ்மா முரளிதரன் மற்றும் சுந்தரி தொடர் நாயகன் ஜிஷ்ணு மேனன் இணைந்து நடிக்கவுள்ளனர்.அண்மையில் நிறைவடைந்த சுந்தரி தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகர் ஜி... மேலும் பார்க்க

முதலில் தமிழன்... பிறகு கம்யூனிஸ்ட்! நீக்கப்பட்ட விடுதலை காட்சிகள் வெளியீடு!

விடுதலை திரைப்படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டுள்ளனர்.இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்த விடுதலை, விடுதலை - 2 படங்கள் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களையே ப... மேலும் பார்க்க