செய்திகள் :

திண்டுக்கல்: அரசு தொடக்கப்பள்ளியில் மாணவர்கள், பெற்றோர் போராட்டம்; `ஆசிரியர் இல்லையா?'- நடந்ததென்ன?

post image

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளி கிராமத்தில் ஒரே வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலை பள்ளி ஆகியவை செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 134 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தத் தொடக்கப் பள்ளியில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்த 66 மாணவ மாணவிகள் பயின்று வந்தனர்.

போராட்டம்

இந்நிலையில் மதுரை நத்தம் துவரங்குறிச்சி நான்குவழிச் சாலை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டபோது, விரிவாக்கத்திற்காக தொடக்கப்பள்ளியின் 2 வகுப்பறைகள் இடிக்கப்ப்பட்டன. இதற்கான இழப்பீட்டுத் தொகை நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஊராட்சி நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டது. அந்த நிதியை பயன்படுத்தி கடந்த ஆண்டு 2 புதிய வகுப்பறைகள் கட்டப்பட்டன. உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார். இதையடுத்து பரளியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியை புதூருக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில் புதிய வகுப்பறைகள் திறக்கப்பட்டு ஓராண்டை கடந்துவிட்ட போதிலும் பரளி பள்ளியில் படித்து வரும் தொடக்கப்பள்ளி மாணவர்களை அழைத்து வந்து வகுப்புகள் நடத்தப்படவில்லை. புதிய கட்டடத்திற்கு தனியாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து மாணவர்கள், பெற்றோர்கள் புதிய பள்ளி கட்டடத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் புதிய வகுப்பறை கட்டடத்தில் காலை வழிபாடு நடத்தி தேசிய கொடி ஏற்றினர். பிறகு தன்னார்வலர்களை அழைத்து வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்த செய்தனர். தகவலறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து எல்லோரும் கலைந்து சென்றனர்.

போராட்டம்

இது குறித்து கல்வித்துறை தரப்பில் கேட்டபோது, ``வகுப்பெடுக்க ஆசிரியர்கள் வரவில்லை என்றும், ஆசிரியர்கள் இல்லையென்றும் வரும் தகவல்கள் தவறானது. புதிய கட்டடத்தில் வகுப்புகள் நடத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.

தங்கச்சிமடம், பாம்பன் ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு... மக்கள் சொல்வதென்ன?

ராமேஸ்வரம் தீவு பகுதியில் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் கிராமங்கள் தனித் தனி ஊராட்சிகளாகவும், ராமேஸ்வரம் பகுதி தனி நகராட்சியாகவும் செயல்பட்டு வருகிறது. தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் ஊராட்சிகளில் பெரும்ப... மேலும் பார்க்க

டெல்லி சலோ: தொடரும் விவசாயிகள் போராட்டம்; நிலவும் பதற்றமான சூழல்!

வேளாண் பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ‘டெல்லிக்கு செல்வோம்’ (டெல்லி சலோ) என்ற போராட்டத்தை பஞ்சாப் - ஹரியானா எல்லையில் உள்ள ஷம்பு என... மேலும் பார்க்க