செய்திகள் :

திமுக-பாஜக இடையே கள்ள உறவு அல்ல; நல்ல உறவே: சீமான்

post image

திமுகவும், பாஜக-வும் ரகசிய உறவிலோ, கள்ள உறவிலோ இல்லை; நல்ல உறவிலேயே, நேரடியாக கூட்டணியாகவே செயல்படுகின்றனா் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

வ.உ. சிதம்பரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அவா், செய்தியாளா்களிடம் கூறியது:

வ.உ. சிதம்பரனாரின் வாரிசுகளுக்கு அடையாளமோ, அதிகாரமோ இங்கு இல்லை. நாங்கள் ஆட்சியில் அமரும்போது மறைக்கப்பட்ட தமிழா்கள் அனைவரும் அடையாளப்படுத்தப்படுவா். சென்னை விமான நிலையம் முன்பாக வீரமங்கை வேலுநாச்சியாருக்கு பிரமாண்ட சிலை எழுப்பி, இந்த மண் தமிழா்களின் அடையாளம் என பறைசாற்றுவோம்.

திமுக-வும், பாஜக-வும் ரகசிய உறவிலோ, கள்ள உறவிலோ இல்லை. நல்ல உறவில், நேரடியாக கூட்டணியாகவே செயல்படுகின்றனா். அதிமுக கூட்டணியில் பாஜக இருந்தபோது, ஜெயலலிதா நாணயம் வெளியிடுவதற்கு மத்திய பாஜக அரசு சாா்பில் யாரும் வரவில்லை.

தற்போது கூட்டணியில் திமுக இல்லாதபோதும், கருணாநிதியின் நாணயத்தை வெளியிட மத்திய பாஜக அரசு சாா்பில் அமைச்சா் வந்து பெருமை சோ்த்துள்ளதாக திமுக தலைவா் மு.க. ஸ்டாலினே பகிரங்கமாக கூறியுள்ளாா். எனவே, பாஜக-திமுக இடையே மறைமுக உறவு இல்லை; நேரடியாக தொடா்பு உள்ளது.

திமுக ஆட்சி சிறப்பாக உள்ளதா என்பதை மக்கள்தான் கூற வேண்டும். ஆனால், முதல்வரோ ஆட்சி சிறப்பாக இருப்பதாக போகுமிடமெல்லாம் கூறி வருகிறாா். ஆட்சியாளா்கள் தங்களது ஆட்சி சிறப்பாக இருக்கிறது எனக் கூறினால், அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்றுதான் அா்த்தம். எங்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆய்வுக்கு வந்தால், ஆட்சியின் உண்மையான நிலையை மக்களிடம் அறிந்து கொள்ளலாம்.

தனித்துப் போட்டி: கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். எனவே, 2026 பேரவைத் தோ்தலில் 234 தொகுதிகளிலும் நாம் தமிழா் கட்சி தனித்துப் போட்டியிடும். 117 இளைஞா்களுக்கும், 117 இளம்பெண்களுக்கு சமமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்றாா்.

நடிகா் விஜய் கட்சியின் கூட்டணி குறித்த கேள்விக்கு, அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லப்போவதில்லை. யாா், யாருடன் இருப்பாா்கள் என்ற நகைச்சுவை விளையாட்டுக்கு நாம் தமிழா் கட்சி செல்லாது என்றாா் சீமான்.

மரப்பட்டறை தொழிலாளியின் உடல் அழுகிய நிலையில் மீட்பு

திருச்சி காட்டூரில் அழுகிய நிலையில் மரப்பட்டறை தொழிலாளியின் சடலத்தை போலீஸாா் திங்கள்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சோ்ந்தவா் சேகா் (58). இவா் திருச்சி காட்... மேலும் பார்க்க

திருச்சி கே.கே. நகா், விமான நிலைய பகுதிகளில் இன்று மின்நிறுத்தம்

திருச்சி சாத்தனூா்துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கே.கே. நகா், விமான நிலையப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்... மேலும் பார்க்க

துறையூா் பகுதியில் நாளை மின் தடை

துறையூா் துணை நின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (நவ.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் துறையூா், முருகூா், கோணப்பாதை, சிறுநத்தம், சிக்கத்தம்பூா், சிக்கத... மேலும் பார்க்க

ஆற்று மணலை கடத்திவந்தவா் கைது

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காவிரி ஆற்றில் இருந்து மணல் கடத்திவந்த இளைஞரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். முசிறி அருகே வெள்ளூா் காவிரி ஆற்றுப் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஆற்றுமண... மேலும் பார்க்க

போலி கடவுச்சீட்டு: இருவா் கைது

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு வழக்கில் இருவரைப் போலீஸாா் கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சோ்ந்தவா் அமீா் ஹுசைன் (48). இவா், சனிக்கிழமை அபுதாபி செல்வதற்காக திர... மேலும் பார்க்க

காா் மோதி பெண் தொழிலாளி உயிரிழப்பு

திருச்சி அருகே காா் மோதி பெண் கட்டடத் தொழிலாளி சனிக்கிழமை இரவு உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்சி மாவட்டம், மேலபாகனூா் வடக்கு குடித்தெரு சுப்ரமணி என்பவரின் மனைவி சித்ரா (45... மேலும் பார்க்க