செய்திகள் :

திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா… பக்தர்களுக்கான வசதிகள், விழா ஏற்பாடுகள் தீவிரம்..!

post image

முருகனின் அறுபடை வீடுகளில் கடற்கரை ஓரத் தலமும், இரண்டாம் படை வீடாகவும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் முக்கிய விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா மிகச்சிறப்பானது.  6 நாள்கள் நடைபெறும் இந்த கந்தசஷ்டி திருவிழாவில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள். இந்த ஆண்டு கந்த சஷ்டி திருவிழா, வரும் நவம்பர் 2-ம் தேதி தொடங்க உள்ளது.

தற்காலிக கொட்டகை அமைக்கும் பணி

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ம் தேதி மாலையில் கடற்கரை பகுதியில் நடைபெற உள்ளது. இதைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகை தருவார்கள். இந்த நிலையில் இந்த கந்த சஷ்டி திருவிழாவிற்காக கோயிலுக்கு வருகை தந்து விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் 18 இடங்களில் 1,11,118 சதுர அடியில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த கொட்டகைகள் அனைத்தும் மழை நேரத்தில் பக்தர்கள் சிரமமின்றி தங்குவதற்காக தகரத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த தற்காலிக கொட்டகையில் 6,500 பக்தர்கள் வரை தங்கி விரதம் மேற்கொள்ளலாம். கொட்டகை அமைக்கும் பணிகளில் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.  அதுமட்டுமல்லாமல் பக்தர்களின் வசதிக்காக கோயில் வளாகத்தில் ஏற்கனவே உள்ள 225 நிரந்த கழிவறைகள் தவிர கூடுதலாக 190 தற்காலிக ஆண், பெண் கழிவறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. 100 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுவாமி தரிசனம் செய்ய வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எல்.இ.டி திரை அமைக்கும் பணி

திருவிழாவின் போது நடைபெறும் யாகசாலை பூஜை, தங்க ரதம் வீதி உலா மற்றும் இதர நிகழ்ச்சிகளை பக்தர்கள் அகன்ற திரையில் கண்டு களிக்க 15 எல்.இ.டி டி.விக்கள் வைக்கப்பட உள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருக்கோயில் நுழைவாயில் முதல் கடற்கரை வரை பல இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகளும் நடந்து வருகிறது. கந்த சஷ்டி விழாவில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு: திண்டல்மலை வேலாயுதசுவாமி கோயில் திருக்கல்யாணம்; குவிந்த பக்தர்கள்! | Photo Album

சூரசம்ஹாரம் நிறைவு நாளாக இன்று (நவம்பர் 8) ஈரோடு திண்டல்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில் முருகன் வள்ளி தெய்வானைக்குத் திருக்கல்யாண உற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழி... மேலும் பார்க்க

`சூரியனார் கோயில் மடத்தின் சொத்துகளை அபகரிக்க ஆதீனம் திருமணம்’ - குற்றச்சாட்டும் ஆதீனத்தின் பதிலும்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோயில் மடம் மிகவும் பழைமையானது. இந்த மடத்தின் ஆதீனமாக 28 வது குருமகா சந்நிதானம் மகாலிங்க சுவாமிகள் இருந்து வருகிறார். இவர் கடந்த அக்டோபர் மாதம் 10-ம... மேலும் பார்க்க

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரம்... படத்தொகுப்பு..!

பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலில் சூரசம்ஹாரம்பழனி தண்டாயுதபாணி திருக்... மேலும் பார்க்க

தென்காசி: ஆய்க்குடி பாலசுப்பிரமணிய சாமி கோயிலில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் அனுமன் நதிக்கரையில் பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. தென் மாவட்டத்தில் திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹார விழாவிற்கு பெயர் பெற்ற திருத்தலம் ஆய்க்குடி ப... மேலும் பார்க்க

பதிவுத் திருமணம் செய்து கொண்ட மடாதிபதி... சர்ச்சைக்கு சூரியனார் கோயில் ஆதீனம் விளக்கம்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயில் நவக்கிரங்களில் ஒன்றான பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள பழமையான சைவ மடங்களில் சூரியனார் கோயில் மடமும் ஒன்று. ... மேலும் பார்க்க

சபரிமலை மண்டல பூஜை: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் முதல் பாதுகாப்பு வரை முன்னேற்பாடுகள் முழு விவரம்!

மண்டல பூஜை ஆலோசனைக் கூட்டம்சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டல கால மகர விளக்கு பூஜைகளுக்காக நவம்பர் மாதம் 14-ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஐயப்ப பக்தர்கள் கூட்ட நெரிசல் காரணமாக பல்வேற... மேலும் பார்க்க