செய்திகள் :

பதிவுத் திருமணம் செய்து கொண்ட மடாதிபதி... சர்ச்சைக்கு சூரியனார் கோயில் ஆதீனம் விளக்கம்!

post image

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயில் நவக்கிரங்களில் ஒன்றான பரிகார ஸ்தலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள பழமையான சைவ மடங்களில் சூரியனார் கோயில் மடமும் ஒன்று.

இந்த ஆதீனத்தின் 28வது மடாதிபதியாக மகாலிங்க சுவாமிகள் இருக்கிறார் இவருக்கு வயது 54. இந்த நிலையில் மகாலிங்க சுவாமி கர்நாடகாவில் ஹேமாஸ்ரீ என்ற பெண்ணை பதிவு திருமணம் செய்து கொண்டதாக சில தினங்களாக தகவல் பரவியது.

சூரியனார் கோயில் ஆதினத்தின் மடாதிபதி மகாலிங்க சுவாமி- ஹேமாஸ்ரீ

திருமணத்திற்கான பதிவுச் சான்றிதழும் சமூக வைலதளங்களில் வைரலானது. இது ஆதீன மடங்கள் மற்றும் ஆன்மிக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூரியனார் கோயில் மடத்தின் நிர்வாகமும் மடாதிபதி திருமணம் செய்து கொண்டதை உறுதி செய்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 10 ம் தேதியே மடாதிபதி மகாலிங்க சுவாமிக்கும், 47 வயதாகும் ஹேமாஸ்ரீ என்ற பெண்ணுக்கும் கர்நாடகாவில் முறைப்படி பதிவுத் திருமணம் நடந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 சைவ ஆதீனங்களில் ஒன்று சூரியனார் கோவில் ஆதீனம். இதில் முன்பிருந்த ஆதீனங்கள் யாரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் 28-வது மடாதிபதி திருமணம் செய்து கொண்டதால் மடத்தின் மாண்பு குறைந்து விட்டதாக ஆன்மிக ஆர்வலர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இந்த திருமண விவகாரம் பேசு பொருளாக ஆகியிருந்தாலும் சலசலப்பு எதுவுமின்றி வழக்கம் போல் மடத்தின் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. செம்மீன் - கடல் அன்னையின் கோபம் | My Vikatan

பதிவு திருமணத்திற்கான சான்றிதழ்

இது குறித்து சூரியனார் கோவில் ஆதினத்தின் மடாதிபதி மகாலிங்க சுவாமிகளிடம் பேசினோம், "நான் ஹேமாஸ்ரீயை திருமணம் செய்து கொண்டது உண்மைதான். கர்நாடகாவில் வீரசைவ மடம், வைணவ மடம், பண்டிட் ரவிசங்கர் ஜி மடம், ராஜராஜேஸ்வரி பீடம் போன்ற மடங்கள் உள்ளன. ஆனால் சைவ மடம் அங்கு இல்லை. இதனால் சைவ மடம் கட்டுவதற்கான ஏற்பாட்டை செய்தோம். இதற்கு பிடரி நகரில் உள்ள தனக்கு சொந்தமான இடத்தை ஹேமாஸ்ரீ வழங்கினார். மடம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

அங்கு கட்டப்படும் மடத்தின் டிரெஸ்டியாக ஹேமாஸ்ரீயை நியமனம் செய்துள்ளோம். இந்தநிலையில் அவரை திருமணம் செய்துள்ளேன். சூரியனார் கோயில் ஆதீனத்தில் இதற்கு முன்பு மடாதிபதியாக இருந்தவர்கள் திருமணம் செய்துள்ளனர் என்பதால் இதில் பெரிய சர்ச்சைகள் எதுவும் இல்லை. ஆதினத்தின் பூஜைகள், நிர்வாகம் எப்போதும் போல் சரியாக நடக்கும். சூரியனார் கோவில் ஆதீனத்தில் ஹேமாஸ்ரீ பக்தராக மட்டும் வந்து செல்வார்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

சபரிமலை: `மாளிகபுறத்தில் மஞ்சள் தூவி, தேங்காய் உருட்ட வேண்டாம்' - கோர்ட் கருத்தை வரவேற்ற தந்திரி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலகால பூஜைகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதற்காக நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் இருமுடிகட்டி சபரிமலைக்குச் சென்று வருகின்றனர். சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பா நதி... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: அமெரிக்கா, சிங்கப்பூர், இலங்கை, சவுதி… உண்டியலில் குவிந்த வெளிநாட்டு கரன்சிகள்!

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில். தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நாட்களில் ஆ... மேலும் பார்க்க

Deivanai Elephant: பாகன் இறந்து, 11 நாள்கள் தீவிர கண்காணிப்புக்குப் பிறகு வெளியே வந்த தெய்வானை..!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக் கோயிலுக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விடுமுறை, திருவிழா மற்றும் விசேச நா... மேலும் பார்க்க

பழநி: `ரஷ்ய பக்தர் தந்த 6 அடி வேல்'- 12 கிலோ எடையில் தந்த காணிக்கையின் காரணம்

தமிழ்க் கடவுளான முருகன் கோயில்களில் முக்கியமான தளமாக பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உள்ளது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் பாதயாத்திரையாகவும், பேருந்துகளில... மேலும் பார்க்க

பூர்வ ஜென்ம பரிகார பூஜை: தீபத் திருநாளில் திருவண்ணாமலையில் உங்கள் கஷ்டங்கள் எல்லாம் நிச்சயம் தீரும்

2024 டிசம்பர் 13-ம் நாள் வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளில் திருவண்ணாமலையில் அமைந்துள்ள ஸ்ரீஅம்மணி அம்மன் ஆலயத்தில் பூர்வ ஜென்ம பரிகார பூஜை நடைபெற உள்ளது. இதனால் உங்கள் பாவங்கள், தோஷங... மேலும் பார்க்க

சபரிமலை: `18 படிகளில் ஏறி நின்று போலீசார் போஸ்' வைரலாகும் போட்டோ... பக்தர்கள் கடும் எதிர்ப்பு!

மண்டலகால மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் திருநடை நவம்பர் 15-ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பம்பா, சபரிமலை சன்னிதானம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரியும் போல... மேலும் பார்க்க