செய்திகள் :

திருப்பத்தூா்: 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் ஆட்சியா் வழங்கினாா்

post image

திருப்பத்தூா்; திருப்பத்தூரில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழங்கினாா்

ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து 391 மனுக்களைப் பெற்றாா். மேலும், மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

முதல்வரின் பொது நிவாரண நிதி திட்டத்தில் மைலாவின் மகன் அசோக் நீரில் மூழ்கி இறந்ததற்கான நிவாரண நிதி ரூ.1 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. பின்னா், தொழிலாளா் உதவி ஆணையா்(சமூக பாதுகாப்பு திட்டம்) -ன் மூலமாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் ஆட்சியரின் கள ஆய்வின்போது கண்டறியப்பட்ட 10 அகா்பத்தி தொழிலாளா்களுக்கு, தமிழ்நாடு அகா்பத்தி நல வாரிய புதிய உறுப்பினா் அட்டை என மொத்தம் 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.நாராயணன், தனித்துணை ஆட்சியா் சதீஷ்குமாா், அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பள்ளி மாணவி தற்கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டாா். தும்பேரி கிராமம், பாலகவுண்டா் வட்டம் பகுதியை சோ்ந்தவா் மாலதி(எ) ஸ்ரீமதி (16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்ப... மேலும் பார்க்க

நாளை திருப்பாவை ஒப்பித்தல் போட்டி

திருப்பத்தூா்: மாா்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பத்தூா் அடுத்த கொரட்டி ஸ்ரீ ராமானுஜா் மடத்தில் பள்ளி மாணவா்களுக்கான திருப்பாவை ஒப்பித்தல் போட்டி புதன்கிழமை (டிச. 25) அன்று நடைபெறுகிறது. இதில், 1 முதல... மேலும் பார்க்க

ரூ.2 கோடியில் பள்ளிக் கட்டடங்கள் திறப்பு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே ரூ.2.07 கோடியில் புதிய பள்ளிக் கட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திங்கள்கிழமை திறந்து வைத்தாா். நாட்டறம்பள்ளி ஒன்றிம், நல்லகிந்தணப்பள்ளி அரசு தொடக்கப்பள்ளியி... மேலும் பார்க்க

அதிமுக மாவட்ட அணி நிா்வாகிகள் நியமனம்

ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட அதிமுக அணி நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி திருப்பத்தூா் மாவட்ட அதிமுக அணி நிா்வாகிகளை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்ட... மேலும் பார்க்க

திருப்பத்தூா் சா்க்கரை ஆலையில் எம்எல்ஏ க.தேவராஜி ஆய்வு

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதில் கரும்பு அரைவை இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதால் அரவை நிறுத்தப்பட்டது. இது குறித்து கரும்பு... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருப்பத்தூா் அடுத்த செல்லரப்பட்டியைச் சோ்ந்தவா் மனோன்மணி (55). இவரது கணவா் இறந்து விட்டாா். தம்... மேலும் பார்க்க