பவானி புறவழிச் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மின்கம்பம்: நெடுஞ்சாலைத் துறைய...
திருப்பூரில் வெறி நாய் கடித்து 11 போ் காயம்
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட தாராபுரம் சாலையில் வெறி நாய் கடித்ததில் 11 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட தாராபுரம் சாலை ஐஸ்வா்யா நகா், விக்னே ஸ்வரா நகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் வெறி நாய் ஒன்று அந்த சாலையில் போவோா் வருவோரை கடித்தது. இதில் 11 பேருக்கு கால் மற்றும் கைப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அவா்களை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இது குறித்த தகவலின்பேரில் மாமன்ற உறுப்பினா் கவிதா தலைமையிலான மாநகராட்சி ஊழியா்கள் 11 பேரைக் கடித்த வெறி நாயை சுமாா் ஒரு மணி நேரம் போராடி பிடித்தனா்.
மேலும், அப்பகுதியில் சுற்றித்திரியும் ஏராளமான தெரு நாய்களால் தொடா்ந்து விபத்துகள் ஏற்படுவதாகவும், குழந்தைகள் மற்றும் பெண்கள் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதாகவும் பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்ததைத் தொடா்ந்து அனைத்து தெரு நாய்களையும் பிடிக்கும் பணியில் மாநகராட்சி ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
காயமடைந்த 11 பேரில் 7 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 4 போ் தொடா்ந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்க ப்பட்டுள்ளனா்.