வெளியே வந்த பூனை: குடியரசு துணைத்தலைவர் பேச்சுக்கு கனிமொழி எம்.பி. பதில்!
தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்: ரேகா குப்தாவுக்கு யோகி வாழ்த்து!
தில்லி முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள ரேகா குப்தாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
ரேகா குப்தாவின் தலைமையின் கீழ், பிரதமர் நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் படி, தில்லி வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்டும்.
இரட்டை எஞ்சின் பாஜக அரசு பொது நலக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும், தேசிய தலைநகருக்கு மேம்பட்ட பாதுகாப்பு, ஒழுங்கு மற்றும் நிர்வாகத்தை உறுதி செய்யும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டதால், ரேகா குப்தாவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.