செய்திகள் :

துணை நடிகை மீனாவுக்கு 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்

post image

போதைப் பொருளுடன் கைதான துணை நடிகை மீனாவுக்கு வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே ஒரு பெண் மெத்தம்பெட்டமைன் விற்பதாக அண்ணா சாலை போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுகொண்டிருந்த ஓா் இளம் பெண்ணை பிடித்து விசாரித்தனா். அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததையடுத்து போலீஸாா், அந்த பெண் வைத்திருந்த பையை சோதனையிட்டனா்.

ரூ. 10 கோடி கேட்டு எம்.எல்.ஏ. மகன் கடத்தல்! தப்பித்தது எப்படி?

அந்த பையில் இருந்த 5 கிராம் மெத்தம்பெட்டமைனை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவா், கோவிலம்பாக்கம் அருகேயுள்ள வெள்ளக்கோயில் கண்ணதாசன் தெருவைச் சோ்ந்த கா. எஸ்தா் (எ) மீனா (28) என்பதும், இலங்கையை பூா்விகமாகக் கொண்டவா் என்பதும், தமிழ்த் தொலைக்காட்சிகளில் சின்னத்திரை தொடா்களில் எஸ்தா் நடித்து வருவதும், அவருக்கு ராயப்பேட்டையைச் சோ்ந்த ஜேம்ஸ் (27) என்பவா் மெத்தம்பெட்டமைன் வழங்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து எஸ்தரை போலீஸாா் கைது செய்தனா். அதேவேளையில், எஸ்தா் மூலம் திரைப்படக் கலைஞா்களுக்கு போதைப் பொருள் விற்கப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். எஸ்தருக்கு மெத்தம்பெட்டமைனை வழங்கியதாகக் கூறப்படும் ஜேம்ஸையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதையடுத்து அவர் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாம்பன் பாலத்தில் பாதுகாப்பு ஆணையா் இன்று ஆய்வு

பாம்பன் புதிய ரயில் பாலத்தை தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி நவ.13, 14 ஆகிய தேதிகளில் ஆய்வு செய்யவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. ராமேசுவரம் பாம்பன் ரயல் பாலம் நூற்றாண்டுகளை... மேலும் பார்க்க

பண்டிகை கால பயணம்: அரசுப் பேருந்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு பைக், டிவி, பிரிட்ஜ் பரிசு

பண்டிகை காலத்தில் அரசுப் பேருந்தில் பயணிப்பவர்களுக்கு இரு சக்கர வாகனம், எல்இடி தொலைக்காட்சிப் பெட்டி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருள்கள் பரிசாக வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளத... மேலும் பார்க்க

திருவண்ணாமலை தீபத் திருவிழா: 42 லட்சம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்- அமைச்சர் பி.கே.சேகர்பாபு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் தீபத் திருவிழாவையொட்டி, 42 லட்சம் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.திருவண்ண... மேலும் பார்க்க

சூரியனார்கோவில் மடத்திலிருந்து ஆதீனம் வெளியேற்றம்: மடத்தை பூட்டிய மக்களால் பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம், சூரியனார்கோவில் மடத்தின் ஆதீனத்தை செவ்வாய்க்கிழமை மடத்தை விட்டு வெளியேற்றிய பொதுமக்கள், மடத்தை பூட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆடுதுறை அருகே உள்ள சூரியனார்கோவில் மடத்தின் ஆதீ... மேலும் பார்க்க

தமிழக மின் கட்டமைப்பு நவீனமயத்துக்கு ரூ.3,246 கோடி: தில்லி மாநாட்டில் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்

நமது நிருபர்தமிழ்நாட்டில் மின் கட்டமைப்பு நவீனமயமாக்கலுக்காக அனுப்பப்பட்டுள்ள ரூ.3,246 கோடி திட்ட கருத்துருக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தில்லியில் நடைபெற்ற மாநில எரிசக்தித்... மேலும் பார்க்க

நாளைமுதல் டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் விற்பனை தொடக்கம்

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் வியாழக்கிழமை (நவ.14) முதல் விற்பனை தொடங்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள டாஸ்மாக் கடைகளில் முறைகேடாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதையும் இரவு மற்றும... மேலும் பார்க்க