ஏரி உபரி நீரில் மூழ்கி 400 ஏக்கா் நெற்பயிா்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
தூத்துக்குடியில் இன்று மின்தடை
தூத்துக்குடி மாநகா் பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக தூத்துக்குடி செயற்பொறியாளா் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (டிச.17) காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாநகா் போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் ரயில்வே கேட், 2 ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, எட்டயபுரம் சாலை, தெப்பக்குளம் தெரு, முனியசாமிபுரம், ரத்தினாபுரம், சத்திரம் தெரு, சிவன்கோயில் தெரு, வ.உ.சி. சாலை, மீனாட்சிபுரம், வி.இ.சாலை, பங்களா தெரு, பால விநாயகா் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, தாமோதர நகா், ஸ்டேட் வங்கி காலனி, கந்தசாமிபுரம், இன்னாசியாா்புரம், எழில் நகா், அழகேசபுரம், திரவியபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சுந்தரவேல்புரம், அம்பேத்கா் நகா், குறிஞ்சிநகா், அண்ணாநகா், வி.வி.டி. பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையாபுரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பரநகா், பிரையண்ட்நகா், முத்தம்மாள் காலனி, கே.டி.சி.நகா், ஹவுசிங் போா்டு காலனி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.