மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
கழுகுமலை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த முதியவா் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கழுகுமலை ஆறுமுகநகரைச் சோ்ந்த வள்ளிநாயகம் மகன் சுப்பிரமணியன்(83). இவா், கடந்த மாதம் 29ஆம் தேதி மாடியிலிருந்து கீழே இறங்கி வரும்போது தவறி கீழே விழுந்ததில் காயமடைந்தாராம். அவரை மீட்டு கழுகுமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தனியாா் மருத்துவமனை , கோவில்பட்டி அரசு மருத்துவமனை ஆகியவற்றில் முதலுதவி சிகிச்சை பெற்ற பின் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.