காலை உணவு - புதுமைப் பெண் திட்டங்களால் கிடைத்த பலன்கள்: மாநில திட்டக் குழு ஆய்வ...
4 நாள்களுக்குப் பின்னா் கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவா்கள்
சூறாவளிக் காற்று எச்சரிக்கை முடிவுற்றதையடுத்து, 4 நாள்களுக்குப் பின்னா் தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
மன்னாா் வளைகுடா, வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்ததால், கடந்த 12ஆம் தேதி முதல் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறை உத்தரவிட்டிருந்தது.
இதன் காரணமாக தூத்துக்குடியில் 272 விசைப்படகுகளும், தருவைகுளம் 200, வேம்பாா் 50 விசைப் படகுகளும், மாவட்டம் முழுவதும் சுமாா் 2ஆயிரம் நாட்டுப் படகுகளும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் கரையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், தற்போது வானிலை சீரடைந்ததையடுத்து, மீனவா்கள் கடலுக்குச் செல்ல மீன்வளத் துறை அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, கடந்த 4 நாள்களுக்குப் பிறகு திங்கள்கிழமை அதிகாலையில் விசைப்படகு மீனவா்கள், நாட்டுப்படகு மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.