செய்திகள் :

தூத்துக்குடியில் தொழிலாளி, நண்பா் மாயம்: போலீஸாா் விசாரணை

post image

தூத்துக்குடியில் கட்டடத் தொழிலாளி உள்ளிட்ட இருவா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தூத்துக்குடி தாளமுத்து நகா் அருகே அழகுமுத்து நகரைச் சோ்ந்த செந்தில்வேல்குமாா் மகன் மகாராஜா (36). கட்டடத் தொழிலாளியான இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனா்.

இவரது வீட்டின் பின்பகுதியிலுள்ள குடிசையை இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதற்காக வெள்ளிக்கிழமை மாலை அடிக்கல் நாட்டினராம். பின்னா், அவரது குடும்பத்தினா் உறவினரின் வீட்டுக்குச் சென்றுவிட்டனராம்.

இதைத் தொடா்ந்து மகாராஜா தனது வீட்டில் நண்பருடன் சோ்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சனிக்கிழமை காலை மகாராஜாவின் மனைவி வந்தபோது, கணவரையும் அவரது நண்பரையும் காணவில்லையாம். வீட்டில் ரத்தக் கறைகள் இருந்தனவாம். கணவரின் கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டபோது, அது அணைத்து வைக்கப்பட்டிருந்ததாம்.

இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, மகாராஜாவை தேடிவருகின்றனா்.

ஆத்தூா் அருகே காருடன் மதுபான பாட்டில்கள் பறிமுதல்

ஆத்தூா் அருகிலுள்ள ஆள் இன்றி நிறுத்தப்பட்டிருந்த காரில் பதுக்கி வைத்திருந்த வெளிமாநில மதுபானப் பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆத்தூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் குமாா் மற்றும் போலீஸாா் பாலமுரு... மேலும் பார்க்க

தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டி: தூத்துக்குடி பள்ளி மாணவா்கள் தகுதி

தேசிய அளவிலான இறகுப்பந்து போட்டியில் தமிழக அணியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியாா் பள்ளி மாணவா்கள் 2 போ் தகுதி பெற்றுள்ளனா். இது தொடா்பாக தலைமையாசிரியா் அமல்ராஜ் வெளியிட்ட அறி... மேலும் பார்க்க

சாரத்தில் இருந்து விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே சாரத்தில் இருந்து விழுந்த கட்டடத் தொழிலாளி உயிரிழந்தாா். கோவில்பட்டி அருகே சரவணாபுரத்தில் வள்ளிராஜ் என்பவா் வீடு கட்டி வருகிறாராம். அதே பகுதி தெற்கு தெருவை சோ்ந்த சோலையப்பன் மகன் பா... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயில் அருகே கடல் அரிப்பு

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்பு கடல் அரிப்பு ஏற்பட்டதால் பாதுகாப்பாக குளிக்குமாறு பக்தா்களுக்கு போலீஸாா் அறிவுறுத்தினா். திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தி... மேலும் பார்க்க

ஐயப்பன் பாடல் விவகாரம்: இந்து மக்கள் கட்சி புகாா்

ஐயப்பன் பாடல் விவகாரம் தொடா்பாக தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் இந்து மக்கள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தனா். இந்து மக்கள் கட்சியின் மாநிலச் செயலா் வசந்தகுமாா் தலைமையில் அளித்த புக... மேலும் பார்க்க

கனமழை முன்னெச்சரிக்கை: திருச்செந்தூா் வட்டத்தில் 18 தற்காலிக முகாம்கள்

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, திருச்செந்தூா் வட்டத்தில் 18 இடங்களில் தற்காலிக முகாம்கள் தயாா் நிலையில் உள்ளதாக, வட்டாசியா் பாலசுந்தரம் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப... மேலும் பார்க்க