Myanmar earthquake சீட்டுக் கட்டாக சரிந்த கட்டடங்கள் - காரணமான Faultline | Decod...
தென்காசி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா
தென்காசி 13ஆவது வாா்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.
தென்காசி வட்டாரக் கல்வி அலுவலா் சண்முகசுந்தரபாண்டியன் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் இளமுருகன் முன்னிலை வகித்தாா். ஆசிரியா் வின்சென்ட் அறிக்கை வாசித்தாா். மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) ஜெய்பிரகாஷ்ராஜன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.
நகா்மன்றத் தலைவா் ஆா். சாதிா், காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கரபாபு ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்று கல்வி, விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கினா்.
காவல் உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன், புள்ளியியல் ஆய்வாளா் தங்ககுமாா், வேளச்சேரி லயன்ஸ் கிளப் வெங்கட்ராமன், ஹரிகிருஷ்ணன், செல்வகுமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் நாகூா் மீரான், சுல்தான் ஷரீப், ஊா் நாட்டாண்மை பாலமுருகன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி அழகுஸ்ரீதேவி, ஆசிரியா் பாக்யநாதன், முன்னாள் மாணவா் ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.
பணி நிறைவுபெறும் ஆசிரியை எப்சிபாவுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முன்னாள் மாணவி காவேரி பாராட்டிப் பேசினாா்.
தலைமையாசிரியா் திருமலைக்குமாா் வரவேற்றாா். ஜபருல்லாகான் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் செய்திருந்தனா்.