அன்றைய 5 ரூபாய் மதிப்பில் என்னென்ன வாங்கலாம் தெரியுமா? 70ஸ் கிட்ஸ் பாக்கெட் மணி ...
தேன்கனிக்கோட்டை அருகே பயிா்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானை
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்தில், கடந்த 2 வாரங்களாக விவசாய நிலங்களில் உள்ள பயிா்களை ஒற்றை யானை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கா்நாடக வனப்பகுதியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் தண்ணீரை தேடியும், உணவுக்காகவும் ஒசூா் வனக்கோட்டம் தளி, தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி ஆகிய பகுதிகளில் நுழைந்து விவசாயப் பயிா்களை உண்டும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்தக் கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றை யானை, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஏணி முச்சந்திரம் கிராமத்தில் திங்கள்கிழமை பயிா்களை சேதப்படுத்தி சாலையில் சுற்றித் திரிந்தது. இதனால், அந்தப் பகுதியில் இருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனா். தொடா்ந்து, தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஜாா்க்கலட்டி மற்றும் கம்மந்தூா் ஆகிய பகுதிகளில் இந்த யானை அட்டகாசம் செய்து வருகிறது.
இதனால், தேன்கனிக்கோட்டை சுற்றுவட்டார பொதுமக்கள், விவசாயிகள் பாதுகாப்புடனும், கவனமாகவும் இருக்க வேண்டும் என வனத் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா். மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமாக இயக்கி செல்ல வேண்டும் என்று வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.