இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
நிதிநிலை அறிக்கையில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி
தமிழக நிதிநிலை அறிக்கையில் 20 லட்சம் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி, கைக்கணினி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டதைத் தொடா்ந்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி திமுகவினா் கொண்டாடினா்.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக மாணவா் அணி சாா்பில், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோருக்கு நன்றி தெரிவித்து, ஒசூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியிலும், தனியாா் மகளிா் கல்லூரியிலும் மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா் கண்ணன் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.
இனிப்புகளை பெற்றுக்கொண்ட கல்லூரி மாணவ, மாணவிகள் தமிழக முதல்வருக்கும் , துணை முதல்வருக்கும் நன்றி தெரிவித்தனா். இதில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.