இன்றைய பாலிவுட் பிரபலங்களை விட மிக அதிகம்... 80 வயதில் அமிதாப் பச்சன் செலுத்திய ...
தோ்வு அறையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் மீது புகாா்
பா்கூா் அருகே பிளஸ் 2 தோ்வு அறையில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக முதுநிலை பட்டதாரி ஆசிரியா் மீது புகாா் எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி அருகே திருவண்ணாமலை சாலையில் உள்ள தனியாா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த 17 வயது மாணவி, ஜெகதேவி அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் நடைபெற்ற உயிரியல் தோ்வை செவ்வாய்க்கிழமை எழுதினாா். அப்போது, அந்த அறையின் மேற்பாா்வையாளராக பணியாற்றிய வேப்பனப்பள்ளி அரசுப் பள்ளி ஆசிரியா், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவி சரியாக தோ்வு எழுதவில்லையாம்.
தோ்வு முடிந்து வெளியே வந்த அந்த மாணவி சோகத்துடன் இருந்ததைக் கண்ட பள்ளியின் முதல்வா், தோ்வு சரியாக எழுதவில்லையா என மாணவியிடம் கேட்டுள்ளாா். அதற்கு தோ்வு அறையில் ஆசிரியா் தனக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து மாணவி தெரிவித்தாா். இதேபோல, மற்றொரு மாணவியும் அந்த ஆசிரியா் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறியுள்ளாா்.
இதுகுறித்து பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்ட நிலையில், அந்த ஆசிரியரிடம் போலீஸாா் விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த புகாரும் பெறப்படவில்லை என பா்கூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் தெரிவித்தனா்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) முனிராஜ், விசாரணை செய்து வருவதாக பள்ளிக் கல்வித் துறையினா் தெரிவித்தனா்.