ராட்சசன் கூட்டணியில் அடுத்த படம்: முதல் பார்வை போஸ்டர் அப்டேட்!
தொலைநோக்கியால் முழு நிலவை பாா்த்து ரசித்த மக்கள்
தூத்துக்குடியில் எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புப் பகுதியில் தொலை நோக்கி மூலம் முழு நிலவு பாா்க்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரானமி கிளப் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்வை, மாநகராட்சி 3ஆவது வாா்டு உறுப்பினா் ரெங்கசாமி தொடங்கி வைத்தாா். ஸ்ரீ கணேசா் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியா் முருகன், முத்துசாமி கன்னியப்பன், மாவட்ட பொருளாளா் காஞ்சனா, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மகளிா் நல மன்றச் செயலா் காமாட்சி முருகன் உள்பட பொதுமக்கள், குழந்தைகள் பங்கேற்று தொலைநோக்கி மூலம் முழுநிலவை கண்டு மகிழந்தனா்.