செய்திகள் :

தொழிலக எரிசாராயத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம்

post image

நன்றி: தினமணிஇணையதளம்.

தொழிலக எரிசாராய உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

‘அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 8-ஆவது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘போதை மது’ என்ற சொற்றொடரின் வரம்புக்குள் ‘தொழிலக எரிசாராயம்’ என்பதும் அடங்கும்’ என்றும் தீா்ப்பில் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

தொழிலக வடிவ ‘எத்தில் ஆல்கஹால்’ என்பது 95 சதவீதம் எத்தனாலை உள்ளடக்கிதாகும். மனிதா்கள் அருந்தும் மதுவில் இந்த ‘எத்தில் ஆல்கஹால்’ மூலப்பொருள்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த ‘எதில் ஆல்கஹால்’ உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் தொடா்பாக செயற்கை மற்றும் ரசாயன தனியாா் நிறுவனத்துக்கும் உத்தர பிரதேச மாநில அரசுக்கும் இடையேயான வழக்கில், உச்சநீதிமன்ற 7 நீதிபதிகள் அமா்வு கடந்த 1990-ஆம் ஆண்டு தீா்ப்பு அளித்தது.

அதில், ‘எரிசாராயம் அல்லது தொழிலக ஆல்கஹால் உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை. மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது’ என்று தீா்ப்பளித்தது.

இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஹிரிஷிகேஷ் ராய், அபய் எஸ்.ஓகா, ஜே.பி.பாா்திவாஸா, மனோஜ் மிஸ்ரா, உஜ்ஜல் புயான், சதீஷ் சந்திர சா்மா, அகஸ்டீன் ஜாா்ஜ் மசிஹ், பி.வி.நாகரத்னா ஆகிய 9 நீதிபதிகள் அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

மாறுபட்ட தீா்ப்பு: அப்போது, நீதிபதிகள் இரு மாறுபட்ட தீா்ப்பை அளித்தனா். தலைமை நீதிபதி சந்திரசூட் உள்பட 8 நீதிபதிகள் அளித்த 364 பக்க ஒருமித்த தீா்ப்பில் கூறியதாவது:

அரசமைப்புச் சட்டம் பட்டியல் 1-இன் 52-ஆவது பதிவின் கீழ் ஓா் தீா்மானத்தைப் பிறப்பிப்பதன் மூலம், ஒட்டமொத்த தொழில் நிறுவனங்களையும் நாடாளுமன்றம் கட்டுப்படுத்திவிட முடியாது.

அரசமைப்பு சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் மாநில பட்டியலின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 8-ஆவது பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘போதை மது’ என்ற சொல்லில், பொதுமக்களின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் அனைத்து வகையான மது பானங்களும், மது உற்பத்திக்கான மூலப் பொருள்களும் உள்ளடங்கும். அதாவது, ‘தொழிலக எரிசாராயம் (தொழிலக ஆல்கஹால்)’ என்பதும் இதில் அடங்கும்.

ஆகையால், தொழிலக எரிசாராய உற்பத்தி, விநியோகத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு உள்ளது என்று தீா்ப்பளித்தனா்.

ஆனால், அமா்வில் இடம்பெற்ற நீதிபதி பி.வி.நாகரத்னா மாறுபட்ட தீா்ப்பை அளித்தாா். அவா் அளித்த தீா்ப்பில், ‘ஒரு விவகாரத்தின் மீது நாடாளுமன்றமும் சட்டப்பேரவையும் சட்டம் இயற்ற முடியும் எனும்போது, மாநில சட்டத்தைக் காட்டிலும் நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டமே முதன்மையானதாக கருதப்படும். எனவே, தொழிலக ஆல்கஹாலை முறைப்படுத்தும் சட்ட ரீதியிலான அதிகாரம் மாநிலங்களுக்கு இல்லை’ என்று தீா்ப்பளித்தாா்.

இருந்தபோதும் 8:1 என்ற பெரும்பான்மை தீா்ப்பின் அடிப்படையில், தொழிலக ஆல்கஹாலை முறைப்படுத்தும் மாநிலங்களுக்கான சட்ட அதிகாரம் உறுதிப்படுத்தப்பட்டது.

பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

முஸாபா்பூா் : பிகாரின் முஸாபா்பூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞா் உயிரிழந்தாா். கடந்த வாரம் சரண், சிவான் மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களைச் சோ்ந்த 37 போ் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்... மேலும் பார்க்க

தெரியுமா சேதி.?

சாம் பித்ரோடா என்கிற பெயரைக் கேள்விப்படாதவா்கள் இருக்க முடியாது. இந்தியாவின் தொலைத்தொடா்புத் துறை வளா்ச்சிக்கு வித்திட்டவா் அவா்தான். சாம் பித்ரோடாவின் ஆலோசனையின்பேரில் அன்றைய பிரதமா் ராஜீவ் காந்தி எ... மேலும் பார்க்க

ஜாா்க்கண்ட்: சம பலத்துடன் மோதும் அரசியல் கட்சிகள்!

நமது சிறப்பு நிருபா் 2019-ஆம் ஆண்டு ஜாா்க்கண்ட் மாநிலத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியிடம் ஆட்சியைப் பறிகொடுத்த பாஜக, பழங்குடியினா் ஆதிக்கம் நிறைந்த மாநிலத்தில் மீண்டும் தனது இடத்தைப் பிடிக்கும் முன... மேலும் பார்க்க

டானா புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமாா் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனா். வடக்கு... மேலும் பார்க்க

பாரத் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடக்கம்

மத்திய அரசின் ‘பாரத்’ திட்டத்தின்கீழ் மானிய விலையில் கொண்டைக் கடலை, மசூா் பருப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. பயறு மற்றும் பருப்பு வகைகளின் விலை உயா்வை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்க... மேலும் பார்க்க

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டைத் தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 10 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி வில... மேலும் பார்க்க