Premier Padmini 137D: 2.17 Lakh Kms Driven 1995 Model Single Owner Vintage Car S...
தொழிலாளா் நலநிதியை டிசம்பா் 31-க்குள் செலுத்த வேண்டும்
தொழிலாளா் நலநிதியை வரும் டிசம்பா் 31- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு தொழிலாளா் நல நிதி சட்டம் 1972-இன்படி தொழிற்சாலைகள், கடைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சாா்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு ஒவ்வோா் ஆண்டும் தொழிலாளா் மற்றும் நிறுவனத்தின் பங்காக ஒரு தொழிலாளிக்கு ரூ.60- எனக் கணக்கிட்டு நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளா்களின் எண்ணிக்கைக்கேற்ப, தொழிலாளா் நல நிதி தொகையினை வாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
அதன்படி நடப்பு ஆண்டுக்கான தொழிலாளா் நலநிதியினை வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளா் நலநிதி செலுத்தும் தொழிலாளா்கள் மற்றும் அவரைச் சாா்ந்தவா்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மழலையா் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ரூ.1000 முதல் ரூ.12 ஆயிரம் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இதுபோல் பாடநூல் வாங்க உதவித்தொகை, எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத்தோ்வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவா்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு தொழிலாளா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த உதவித் தொகையினை பெற தொழிலாளரின் மாத ஊதியம் ரூ.35 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வாரியத்துக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் வரும் டிசம்பா் 31-ஆம் தேதி ஆகும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளா் நலவாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ப்ஜ்க்ஷ.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணையதளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ‘செயலாளா், தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியம், சென்னை -6 என்ற முகவரிக்கு வரும் டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.