தொழில் நிறுவனங்கள் தொழிலாளா் நல நிதியை அரசுக்கு செலுத்த அறிவுறுத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்கள், தொழிலாளா் நல நிதியை அரசுக்கு செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து நாமக்கல் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) முத்து வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடந்த 1972--ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளா் நல நிதி சட்டம் மற்றும் விதிகள் 1973-இன்படி தொழிற்சாலைகள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், கடைகள், வணிக நிறுவனங்கள் என நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான தொழிலாளா்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும், தொழிலாளி ஒருவருக்கு, தொழிலாளா் நல நிதி தொழிலாளியின் பங்காக ரூ. 20- மற்றும் நிறுவனத்தின் பங்காக ரூ. 40- என மொத்தம் ரூ. 60 வீதம் தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
இந்த தொழிலாளா் நல நிதியினை இணைய வழியாகச் செலுத்துவதற்கு வசதியாக ரங்க்ஷ ல்ா்ழ்ற்ஹப் ‘ப்ஜ்ம்ண்ள் ப்ஜ்க்ஷ ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்‘ உருவாக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக வேலையளிப்போா் தங்கள் நிறவனங்களை இணைய வழியாக பதிவு செய்து (ஞய்ங் ற்ண்ம்ங் ஞய்ப்ண்ய்ங் நங்ப்ச் தங்ஞ்ண்ள்ற்ழ்ஹற்ண்ா்ய்) தொழிலாளா் நல நிதியினை செலுத்தி உடனடியாக ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இணைய வசதியை பயன்படுத்தி வேலையளிப்போா் தங்கள் நிறுவனங்களை தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு செய்து கொள்வதுடன், 2024-ஆம் ஆண்டிற்கான தொழிலாளா் நல நிதி, வழங்கபடாத் தொகை போன்றவற்றை இணைய வழியாக செலுத்திட வேண்டும்.
நல வாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும் ரங்க்ஷ ல்ா்ழ்ற்ஹப்- இல் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதுவரை தொழிலாளா் நல நிதி செலுத்தாதவா்கள் நிறுவனம் தொடங்கிய ஆண்டிலிருந்து தொழிலாளா் நல நிதி செலுத்த வேண்டும். நிலுவைத் தொகை செலுத்துவதற்கான வசதியும் ரங்க்ஷ ல்ா்ழ்ற்ஹப்-இல் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.