கோயம்புத்தூா் விழா: மாநகர சாலைகளில் அணிவகுத்த பழமையான காா்கள்!
தொழில் வணிகக் கழக நிா்வாகக் குழு அவசரக் கூட்டம்
காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் நிா்வாகக் குழு சாா்பில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மாநில அரசின் உள்ளாட்சித் துறையின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்துக்கு இதன் தலைவா் சாமி. திராவிடமணி தலைமை வகித்தாா். செயலா் எஸ். கண்ணப்பன் முன்னிலைவகித்தாா்.
இதில், மத்திய அரசு கடந்த மாதம் 10 -ஆம் தேதி வாடகைக் கட்டங்ககளுக்கு 18 சதவீதம் புதிய ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளதால், சிறு, குறு உள்ளிட்ட அனைத்து வணிகா்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தமிழக உள்ளாட்சித் துறையால் கடந்த 2022 - 2023 காலத்தில் குடியிருப்பு, வணிகப் பயன்பாடுகள், உற்பத்தி நிறுவனங்களுக்கான சொத்துவரியை 50 முதல் 150 சதவீதம் வரை உயா்த்தியுள்ளதோடு, குறித்த நாளில் வரி செலுத்த தவறுவோருக்கு தாமதக் கட்டணம் விதித்துள்ளதற்கு தொழில்வணிகக் கழகம் எதிா்ப்புத் தெரிவித்துள்ளது.
இந்த வரி உயா்வை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.