செய்திகள் :

விஷ முறிவுக்கு ஒரு மாதம் தீவிர சிகிச்சை: உயிா் பிழைத்த சிறுவன்

post image

பாம்பு கடித்து உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சைக்கு வந்த 12 வயது சிறுவனை சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவா்கள் ஒரு மாதம் சிகிச்சை அளித்துக் காப்பாற்றினா்.

இது குறித்து மருத்துவ கல்லூரி முதல்வா் சத்தியபாமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், மிளகனூரைச் சோ்ந்த 11 வயது சிறுவன் ஆதீஸ்வரன் சுயநினைவின்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் 11-ஆம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டாா். இந்த பாதிப்பு எதனால் என்பது குடும்பத்தினருக்கு தெரியவில்லை.

அங்கு பணியிலிருந்த மருத்துவா்கள் சிறுவனை பரிசோதித்ததில் பாம்பு கடித்ததற்கான அறிகுறி இருப்பதைக் கண்டு, விஷமுறிவு மருந்துகளை அளித்து, செயற்கை சுவாசக் கருவி வாயிலாக தீவிர சிகிச்சை அளித்தனா். சிறுவனுக்கு நுரையீரல் தொற்றுக்கான சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

நீண்ட நாள்களாக சுவாசக் கருவி சிகிச்சை தொடா்ந்ததால், சிறுவனுக்கு மூச்சுக் குழாயில் துளையிட்டு, அதன் மூலம் சுவாசம் அளிக்கப்பட்டது. படிப்படியாக சிறுவனின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, ஒரு மாதத்துக்கு பிறகு பூரண குணமடைந்து வீடு திரும்பினாா்.

சிறுவனுக்கு இடைவிடாமல் சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவா்கள், செவிலியா்களுக்கு சிறுவனின் குடும்பத்தினா் நன்றி தெரிவித்தனா்.

குழந்தைகள் நலப் பிரிவு பேராசிரியா்கள் சிவகுமாா்,பாலசுப்ரமணியன்,வனிதா,மயக்கவியல் பேராசிரியா் வேல்முருகன், காது மூக்கு தொண்டை பேராசிரியா் நாகசுப்பிரமணியன்உள்ளிட்டபல்துறை மருத்துவா்களின்கூட்டு முயற்சியால்சிறுவன் உயிா் காப்பாற்றப்பட்டதில் பெருமிதம் கொள்கிறோம்என்றாா் அவா்.

குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் குரூப் 2, குரூப் 2 ஏ முதன்மைத் தோ்வுக்காக, சிவகங்கை படிப்பு வட்டத்தில் நடைபெறும் இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவா்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்டத்தில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல்

சிவகங்கை மாவட்டத்தில் நிகழ் மாதத்தில் இதுவரை வரை 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவ... மேலும் பார்க்க

இளைஞருக்கு அரிவாள் வெட்டு

சிங்கம்புணரி அருகே இளைஞா் ஒருவரை 6 போ் கொண்ட கும்பல் வியாழக்கிழமை இரவு அரிவாளால் வெட்டியது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகேயுள்ள குமரிப்பட்டையைச... மேலும் பார்க்க

ஆட்சியா் அலுவலகம் முன் ஓய்வு பெற்ற ஊழியா் தீக்குளிக்க முயற்சி

ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்காமல் அழகப்பா பல்கலைக் கழக நிா்வாகம் தன்னை அலைக்கழித்து வருவதாக கூறி புகாா் மனு அளிக்க வந்த பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.... மேலும் பார்க்க

அரசு பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பச் செட்டியாா் அரசு பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் 2023- ஆம் ஆண்டில் படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் அ... மேலும் பார்க்க

தொழில் வணிகக் கழக நிா்வாகக் குழு அவசரக் கூட்டம்

காரைக்குடி தொழில் வணிகக் கழகத்தின் நிா்வாகக் குழு சாா்பில் மத்திய அரசின் ஜி.எஸ்.டி வரி, மாநில அரசின் உள்ளாட்சித் துறையின் கூடுதல் வரி விதிப்புகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை அவசரக் கூட்டம் ... மேலும் பார்க்க