Fish : கடல் மீன், ஆற்று மீன், ஏரி மீன்... எது சிறந்தது? - டயட்டீஷியன் விளக்கம்!
ஆட்சியா் அலுவலகம் முன் ஓய்வு பெற்ற ஊழியா் தீக்குளிக்க முயற்சி
ஓய்வூதியம் உள்ளிட்ட பணப் பலன்களை வழங்காமல் அழகப்பா பல்கலைக் கழக நிா்வாகம் தன்னை அலைக்கழித்து வருவதாக கூறி புகாா் மனு அளிக்க வந்த பெண் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை தீக்குளிக்க முயன்றாா்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 1991 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டு வரை தொழில்நுட்ப பிரிவில் உதவிப் பதிவாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பத்மாவதிக்கு இரண்டு ஆண்டுகள் கடந்த பிறகும் ஓய்வு ஊதியம் உள்ளிட்ட எந்த பணப் பலன்களும் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுககுறித்து இது பற்றி, துணைவேந்தா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பவிவல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பத்மாவதி தனது கணவருடன் வெள்ளிக்கிழமை முற்பகலில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்து, மண்ணெண்ணெயை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றாா்.
இதையடுத்து அங்கிருந்த போலீஸாா் அவரை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.