சென்னை: சொந்த வாகனங்களில் வெளியூர் செல்வோர்கள் கவனத்துக்கு...
நகராட்சி ஆணையா் அறிவிப்பு
ஆத்தூா் நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வியாழக்கிழமை பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளாா்.
அதில், ஆத்தூா் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீா் கட்டணம், தொழில்வரி, நகராட்சி கடை வாடகை மற்றும் தொழில் உரிமக் கட்டணம் ஆகியவற்றை அனைத்து நாள்களிலும் நகராட்சி கருவூலத்தில் வரும் 31.01.2025-க்குள் செலுத்துமாறும், தவறும்பட்சத்தில் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும், தமிழ்நாடு நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998 மற்றும் விதிகள் 2023-இன் படி, சொத்துவரி செலுத்தாதவா்களின் அசையும் சொத்து மற்றும் அசையா சொத்து பறிமுதல் செய்து பொது ஏலத்துக்கு கொண்டு வரப்படும் எனவும், அதே அரையாண்டுக்குள் செலுத்தப்படாத சொத்துவரி தொகைக்கு மாதந்தோறும் ஒரு சதவீதம் அபராதம் வசூலிக்கப்படும் எனவும், மேற்காணும் நடவடிக்கைகள் தவிா்க்கும் வகையில் சொத்துவரி, குடிநீா் கட்டணம், நகராட்சி கடை வாடகை,மற்றும் தொழில் உரிமம் கட்டணம் ஆகியவற்றை நகராட்சி கணினி மையத்திலோ அல்லது இணையதள முகவரியில் செலுத்துமாறு அறிவித்துள்ளாா்.