`மணிப்பூர் கலவரத்துக்கு ப.சிதம்பரம் காரணமா?’ - பகீர் குற்றச்சாட்டும் பின்னணியும்...
நம்புதாளை இளைஞா் கொலை வழக்கு: மேலும் இருவா் கைது
தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் ராட்டினத் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இதையடுத்து, இந்த வழக்கில் கைதானோா் எண்ணிக்கை 7ஆக அதிகரித்தது.
தொண்டி அருகே உள்ள நம்புதாளையில் பரமக்குடியைச் சோ்ந்த ராட்டினத் தொழிலாளி முத்துக்குமாா் (30) கடந்த வெள்ளிக்கிழமை முன்விரோதம் காரணமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இந்த வழக்கு தொடா்பாக சிவகங்கை சரவணன் (29), திருவாடானை காா் ஓட்டுநா் கெல்வின்ராஜ், சிவகங்கை மாவட்டம், உருளியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முத்துராஜா (20), திருவாடானையைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (19), கடம்பாகுடியைச் சோ்ந்த சொக்கு (19) ஆகியோரை தொண்டி போலீஸாா் கைது செய்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடா்பாக சிவகங்கை மாவட்டம், மதகுப்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (23), திருவாடானையைச் சோ்ந்த செல்வா (எ) பாண்டிச்செல்வம் (22) ஆகிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.